வாரம் வாரம் புது திரைப்படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் 10 திரைப்படங்கள் வெளியானது. அதில், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ரஜினி முருகன் உள்ளிட்டவை ரீ ரிலீஸ் படங்கள். மீதம் இருக்கும் 8 படங்களில் குறைந்தபட்சம் வசூலை ஈட்டிய படங்களாக ரியோ நடித்து வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் உள்ளது. யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரியோவின் முந்தைய படமான ஜோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை தொடர்ந்து இந்த படத்திற்கும் மக்கள் வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகின்றனர். படத்திற்கு வரும் ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பெருசு vs ஸ்வீட்ஹார்ட்... Box Office-ல் ஜெயிச்சது யார்?
காதலர்களுக்கு நடுவே சண்டைகளும், பிரிவுகளும் பற்றி இந்த படம் விவரிக்கும் விதம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி யுவனின் இசை படத்தை மேலும் தூக்கி நிறுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதனால் இப்படத்தினை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகின்றனர். கடந்த மார்ச் 14 ம் தேதி இந்த படம் வெளியான நிலையில் தற்போது வரை சுமார் 1.5 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதால், படம் வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறிவிட்டது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏற்கனவே படத்தை ஓடிடி தளத்தில் நல்ல விலைக்கு விற்று விட்டதால், படக்குழு பெரிய லாபத்துடன் நிம்மதியாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களைத் தெரிவித்து படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த படத்தை பார்த்த பலர் இது ஒரு ஃபீல் குட் படம் என்று கூறி வருகின்றனர். அந்த வரிசையில் படத்தின் தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் யுவன் சங்கர் ராஜா படக்குழுவினருக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து, ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் நல்ல விதமான விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். படக்குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். இதனால் படக்குழுவினர் ஊக்கமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ரகசியத்தை உடைத்த யுவன் சங்கர் ராஜா.. ஹார்ட் பீட்டை எகிற வைக்க வருகிறது ஸ்வீட் ஹார்ட்..!