உடல் ஆரோக்கியம் பேண விரும்புவோர் பலரும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். காலையில் உட்கொள்ளும் உணவு உடலால் விரைவாக உறிஞ்சப்பட்டு அன்றைய முழு நாளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே சரியான காலை உணவைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் ஆரோக்கியம் என நினைத்து எடுக்கும் சில உணவுகள் குடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும்.
மருத்துவர் ஒருவர் இந்த முக்கிய எச்சரிக்கையைப் பகிர்ந்துள்ளார். “உங்கள் காலை உணவுதான் அன்றைய நாள் முழுவதும் குடல் எப்படி உணரும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த மூன்று உணவுகளையும் வெறும் வயிற்றில் ஒருபோதும் சாப்பிடாதீர்கள்” என அவர் கூறியுள்ளார்.
முதலாவதாக, சிட்ரஸ் பழங்கள் மற்றும் எலுமிச்சை ஜூஸ். ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் சிட்ரிக் அமிலம் அதிகம். வெறும் வயிற்றில் எடுக்கும்போது இவை குடல் சுவற்றை நேரடியாக எரிச்சலூட்டி அசிடிட்டி, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரண்டாவதாக, ப்ளாக் காபி. இது அமில உற்பத்தியைத் தூண்டி வயிறு உப்புசம், எரிச்சல் மற்றும் ஆற்றல் இழப்பை உண்டாக்குகிறது. மூன்றாவதாக, காரமான உணவுகள். கார சட்னி, காரசாரமான உணவுகள் வயிற்றில் எரிச்சலையும் நீண்டகால அழற்சியையும் தூண்டும்.
இதையும் படிங்க: அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தொப்பை..!! மதிய உணவுக்கு முன் இதை மட்டும் குடிங்க போதும்..!!

இதற்குப் பதிலாக டாக்டர் நடுநிலையான, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைப் பரிந்துரைக்கிறார். ஊறவைத்த நட்ஸ், ஓட்ஸ், வாழைப்பழம், பிரட் ஆம்லெட், இட்லி சாம்பார், தோசை சாம்பார், ஆப்பிள், வேகவைத்த முட்டைகள் போன்றவை குடலைப் பாதுகாத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குடல் ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் அடிப்படையாகும். காலை உணவில் இத்தகைய மாற்றங்களைச் செய்தால் அசிடிட்டி, வீக்கம் போன்ற பிரச்சினைகளைத் தவிர்த்து நாளெல்லாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றி ஆரோக்கியமான காலை வழக்கத்தை மேற்கொள்வோம்.
இதையும் படிங்க: ❤️உலக இதய தினம் இன்று❤️..!! தினமும் பின்பற்ற வேண்டிய 7 இயற்கை வழிகள்.. தெரிஞ்சிக்கோங்க..!!