மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கோவிலுக்கு செல்லும் வழியில் பிக்கப் வேன் விபத்துக்குள்ளானதில் எட்டு பெண்கள் உட்பட 10 பேர் வழியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக்-அப் லாரியின் உரிமையாளரான ஷ்ரவாணி சோம்வார் என்பவர் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் குண்டேஷ்வரர் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். பைட் அருகேயுள்ள பாப்பல்வாடி என்ற இடத்தில் இருந்து 35க்கும் மேற்பட்ட பக்தர்களை ஏற்றிக்கொண்டு பிக்-அப் லாரி கோயிலுக்கு புறப்பட்டுள்ளது.
கோயில் மலைபகுதியில் அமைந்துள்ளது. செங்குத்தான மலைப்பாதயில் ஏற முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்தை வேன் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிங்க: PLEASE வேலைக்கு வாங்க! போராடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
2 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 27 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிக்-அப் லாரியில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் இருந்துள்ளனர். செங்குத்தான மலைப்பாதையில் ஏறிய போது பாரம் தாங்காமல் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அப்பகுதியில் இருந்த சக பக்தர்கள் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்ததால் 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ராகுலுக்கு எத்தன தடவ சொல்றது? நீங்கலாச்சு பொறுப்பா நடந்துக்கங்க ஸ்டாலின்... நயினார் விமர்சனம்