கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மத்திய அரசால் கடந்த 25ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி 100 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான அட்டை வைத்திருப்பவர்கள் வேலை தேவைப்பட்டால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளிக்கும்.
கிராமப்புறத்தில் வசிக்கும் வயதானவர்களை மனதில் வைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. வயதான காலத்திலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்க உதவி செய்கிறது. 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

மத்திய அரசின் ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் திருத்தம் செய்து மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தம் செய்து மத்திய அரசு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு பாகுபாடு இன்றி திறம்பட செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.3.50 கோடியில் மெட்ரோ பூங்கா, விளையாட்டு மைதானம்..! திறந்து வைத்து பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி..!
100 நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 40% பங்களிப்பு அதிகரிப்பால் மாநிலத்தின் நிதி சுமை மேலும் அதிகரிக்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திட்டங்களை செயல்படுத்தும் போதும் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதை கொள்கையாகக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார். 100 நாள் வேலை திட்டம் மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று கூறினார். மக்கள் தேவை அடிப்படையில் மத்திய பாஜக அரசின் புதிய சட்டம் கொண்டுவரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். 100 நாள் வேலை திட்டம் தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதையும் படிங்க: மெரினாவில் பிரம்மாண்ட குடியரசு தின இறுதி அணிவகுப்பு ஒத்திகை..! போக்குவரத்து மாற்றம்..!