பொள்ளாச்சியில் பொங்கல் விடுமுறைக்கு சென்ற பல் டாக்டர் வீட்டில் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொள்ளாச்சி பல்லடம் சாலை கே கே ஜி திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள ரத்தினம் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி குடும்பத்தினருடன் கேரளா மாநிலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் வீட்டுக்கு மருத்துவர் கார்த்திக் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 136 சவரன் நகை மற்றும் ரூபாய் 3 லட்சம் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதையும் படிங்க: வீட்டிற்குள் காத்திருந்த பேரதிர்ச்சி... 140 சவரன் அவுட்...அதிர்ந்து போன சர்க்கரை ஆலை ஊழியர்!

பின்னர் கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தததையடுத்து அங்கு விரைந்த பொள்ளாச்சி Asp சிருஷ்டி சிங் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் .இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை பதிவு செய்தும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சனாதனத்தின் வழிகாட்டி திருவள்ளுவர்.... ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடுத்த சர்ச்சை..