2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி திமுக, மைக்ரோ லெவல் பரப்புரைக்காக கட்சி கட்டமைப்பில் சில மாற்றங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் திமுக ஒன்றிய செயலாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த திமுக தலைமை கழகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

45 பூத்களுக்கு ஒரு செயலாளர் என்ற அடிப்படையில் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தங்கள் தொகுதிகளில் பணிகளை தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுகவில் 800க்கும் மேற்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஒன்றிய செயலாளர்கள் எண்ணிக்கையை 1000க்கும் மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..!

12 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். புதிதாக 250 பேரை ஒன்றிய செயலாளர்களாக நியமித்து தேர்தல் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மைக்ரோ லெவலில் வாக்கு சேகரிக்க வசதியாக ஒன்றிய செயலாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து இவ்ளோ பயமா..? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த நயினார்!!