இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய தரவுகளின்படி, அக்டோபர் 7ம் தேதி முதல் தற்போது வரை 18,500 ஆக்கிரமிப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் உளவியல் அதிர்ச்சி மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (PTSD) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3,769 வீரர்கள் ஏற்கனவே PTSD நோயாளிகளால் பாதிகப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. போர் முடிந்ததும் உளவியல் பாதிப்பு மோசமடையும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எச்சரித்தனர்.
இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் மறுவாழ்வுத் துறை 2028ம் ஆண்டுக்குள் சுமார் ஒரு லட்சம் காயமடைந்த மற்றும் ஊனமுற்ற ஆக்கிரமிப்பு படை வீரர்களை பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குறைந்தது பாதி பேர் மனநலப் பிரச்சினைகளால் கண்டறியப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிறுத்தாமல் எகிறி அடிக்கும் இஸ்ரேல்.. காசாவில் தொடர்ந்து கேட்கும் மரண ஓலம்..!
தற்போது, காசாவில் நடந்த இனப்படுகொலையில் பங்கேற்றதால் ஏற்பட்ட அதிர்ச்சிக்காக 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மனநல சிகிச்சையில் உள்ளனர், அதே நேரத்தில் மேலும் 9,000 பேர் PTSD-க்காக அங்கீகரிக்கப்படுவதற்கான செயல்பாட்டில் உள்ளனர்.
2014 காசா மீதான போருக்குப் பிறகு, 159 வீரர்கள் மட்டுமே PTSD நோயால் பாதிக்கப்பட்டதாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்கு நேர்மாறாக, 2023 இல் 1,430 பேர் அங்கீகரிக்கப்பட்டனர், மேலும் 2024 இல் இந்த எண்ணிக்கை 2,210 ஆக உயர்ந்தது, இது இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வருடாந்திர எண்ணிக்கையாகும்.
காசாவிற்கு எதிரான போர் ஆரம்பித்ததில் இருந்தே 12,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர். இதற்கு போரால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் மட்டுமே காரணம் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... வேதனையைக் கொட்டித்தீர்த்த நயினார் நாகேந்திரன்...!