இன்ஸ்டாகிராம் மூலமாக காதலன் போல் பழகி மாணவியை ஏமாற்றி சுமார் 60 பவுண் தங்க நகைகளை அபகரித்த சக பள்ளி மாணவி. இதில் ஏமாற்றிய பள்ளி மாணவி தன் தாயின் திட்டத்தின் படி நகைகளை ஏமாற்றி வாங்கியது போலிஸார் விசாரனையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலிஸாரின் கைதுக்கு அச்சப்பட்டு பள்ளி மாணவியும் அவரது தாயாரும் தற்கொலை செய்ய முயற்சி. உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாயமான 60 சவரன் நகைகள்:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் உரிமையாளருக்கு மனைவியும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர்வதற்காக காத்து இருக்கிறார். இந்நிலையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் சில தினங்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் செல்ல தன் மனைவி மகள் நகைகள் அணிவதற்காக தனது வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகளை எடுக்க பீரோவை திறந்த பொழுது பீரோவில் சுமார் 60 பவுண் தங்க நகைகள் மாயமாகியுள்ளது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: உங்க தாத்தா காவிய கலைஞரே காவிமயம் ஆனவரு தான்! நீ சின்ன புள்ளப்பா.. உதயநிதியை கலாய்த்த தமிழிசை..!
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் முன்பு தனது மனைவி மற்றும் மகளிடம் நகைகள் மாயமானது குறித்தும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவிக்க செல்ல இருப்பதாக தெரிவித்தார். இதனை கேட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் மகள் பெரும் பதட்டம் அடைந்ததோடு கண்ணீர் விட்டு கதறி அழுது உள்ளார். இதனை பார்த்த தந்தை தன் மகள் ஏன் அழுகிறார் என புரியாமல் மகளிடம் விசாரித்துள்ளார். இதில் தந்தைக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்து.
கதிகலங்க வைத்த பள்ளி மாணவி:
தனது வீட்டில் இருந்து மாயமான 60 பவுண் தங்க நகைகளையும் எடுத்தது தனது மகள் தான் என தெரிய வந்தது. இதன் பின்னர் மகளை அமைதிப்படுத்தி நகைகளை யாரிடம் கொடுத்தாய் என நாசூக்காக தந்தை கேட்டுள்ளார். இதனை தொடார்ந்து பள்ளி மாணவி நடந்த விஷயங்களை கூறியுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு வாலிபருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியதாகவும், ஆனால் தனது காதலனுடன் பேச மட்டும் செய்ததாகவும் அவர் முகம் தெரியாது என்றும் தெரிவித்தார்.
இந்த காதல் தொடர்ந்து வந்த நிலையில் தனது காதலன் வீட்டில் பண பிரச்சனை இருப்பதாகவும் அதற்கு தன்னிடம் உதவி கேட்டு வற்புறுத்தியதாகவும் தான் பணம் இல்லை என்று கூறி பொழுது உங்கள் வீட்டில் நகைகள் இருக்கும் அதனை உன்னுடம் பயிலும் (பெயரை குறிப்பிட்டு) சக தோழியிடம் கொடுத்து அனுப்புமாறு காதலன் மிகவும் கெஞ்சியுள்ளான். இதனால் காதல் மயக்கத்தில் இருந்த மாணவி தன் வீட்டில் இருந்த 60 பவுண் தங்க நகைகளை தன் காதனிடம்கொடுக்கும்படி பள்ளி தோழியிடம் கொடுத்துள்ளார்.
பள்ளி தோழியும் நகைகளை வாங்கி சென்று விட்டு பின்னர் உன் காதலனிடம் நகைகளை கொடுத்து விட்டதாக சில நாட்கள் கழித்து பதில் கூறியுள்ளார். இவ்வாறு நகைகள் எடுத்தது குறித்து ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம் அவரது மகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தனது மகளின் பள்ளி மாணவியிடம் சென்று தன் மகளை ஏமாற்றிய அவரது காதலன் யார் என்றும் அவரிடம் நகைகளை எங்கு வைத்து கொடுத்தாய் எனவும் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் விசாரித்துள்ளார். இதில் தனது மகளின் பள்ளி தோழி முன்னுக்கு பின்னாக பதில்கள் கூறவே சந்தேகம் அடைந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர் இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரை திடுக்கிட வைத்த வாக்குமூலம்:
புகாரின் அடிப்படையில் அந்த மாணவியிடம் விசாரனை நடத்தினார். இதில் அந்த மாணவி கூறிய உண்மைகளை கேட்டு போலீசாரே ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டார்கள். அதாவது நகைகளை வாங்கிய பள்ளி மாணவியின் பெற்றோர்க்கு ஏராளமான கடன் உள்ளது.ஆனால் அந்த கடன்களை அடைக்க முடியாமல் திணறி வந்துள்ளார்கள். இதனை அடுத்து பள்ளி மாணவி உதவியுடன் அவரது தாய் ஒரு நூதன திட்டம் வகுத்துள்ளார்.
அதன்படி உன் பள்ளி தோழி நன்கு வசதி படைத்தவர் என ஏற்கனவே கூறி இருக்கிறாய். ஆகாயால் உன் பள்ளி தோழியை ஏமாற்றி பணம் பெற்று நம் கடனை அடைத்து விடலாம் என பெற்ற தாயே தன் மகளிடம் கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து பணம் பறிப்பதற்கான திட்டம்படி ஏமாற்றிய பள்ளி மாணவி ஒர் ஆண் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கியுள்ளார். அதன் மூலமாக ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் மகளான தன் பள்ளி தோழியிடன் ஆண் நண்பர் போல் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த பழக்கத்தை வைத்து தன் தோழியை காதல் வலையிலும் விழ வைத்துள்ளார். பின்னர் தன் தாயுடன் இணைந்து தங்கள் திட்டம்படி தன் தோழியிடம் காதன் பெயரை கூறி 60 பவுண் தங்க நகைகளை ஏமாற்றி வாங்கி உள்ளார்கள் என போலிசார் விசாரனையில் தெரிய வந்தது.
தற்கொலை முயற்சி:
இதனை தொடர்ந்து போலிசார் தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சாத்தில் பள்ளி மாணவியும் அவரது தாயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்கள். அவர்களை உறவினர்கள் மீட்டு நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் மகளை ஏமாற்றி வாங்கிய நகைகளை மீட்டு எடுக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகிறார்கள். தன் பள்ளி தோழியிடமே இன்ஸ்டாகிராம் மூலமாக காதலன் போல் பழகி தன் தாயுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டு நகைகளை ஏமாற்றி வாங்கிய பள்ளி மாணவியின் செயலும் பெற்ற மகளையே குற்றச்செயலில் ஈடுப்பட வைத்த தாயின் கொடுர குணமும் குமரி மாவட்டத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்று பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.. கொண்டாட காத்திருக்கும் நாசா.. பெருமிதத்தில் இந்தியா!!