உலகத் திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கான 98-வது பரிந்துரைப் பட்டியல் இன்று (ஜனவரி 22) வெளியாகிறது. ஹாலிவுட் மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்த திரைக்கலைஞர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தப் பட்டியலை, அமெரிக்காவின் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (AMPAS) இன்று வெளியிடுகிறது. அமெரிக்க நேரப்படி காலை 8:30 மணிக்கும், இந்திய நேரப்படி இன்று இரவு 7:00 மணிக்கும் இந்தப் பரிந்துரைகள் நேரலையாக அறிவிக்கப்பட உள்ளன. முந்தைய ஆண்டுகளில் இரவு 9:30 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த முறை நேர மாற்றத்துடன் மாலை நேரத்திலேயே பட்டியல் வெளியாக உள்ளது திரைத்துறை வட்டாரங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த ஆண்டின் பரிந்துரைப் பட்டியலை ஹாலிவுட் நட்சத்திரங்களான டேனியல் ப்ரூக்ஸ் மற்றும் லூயிஸ் புல்மேன் ஆகியோர் நேரலையில் வாசிக்க உள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறிப்பாக, இந்த ஆண்டு 'சிறந்த சர்வதேசத் திரைப்படம் பிரிவில் இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட 'கெவி' உள்ளிட்ட படங்கள் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 'சினேர்ஸ்' , 'மார்ரி சுப்ரீம்' போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் திரை விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி வாக்களிப்பு வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில், வெற்றியாளர்களின் விவரங்கள் மார்ச் 15-ஆம் தேதி லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்படும். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கோனன் ஓ பிரையன் இந்த விழாவைத் தொகுத்து வழங்க உள்ளார். ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் வெளியாகும் செய்தியை அடுத்து, சமூக வலைதளங்களில் #Oscars2026 என்ற ஹேஷ்டேக் தற்போது உலக அளவில் 'டிரெண்டிங்கில்' உள்ளது.
இதையும் படிங்க: தல தோனி சொன்ன அந்த வார்த்தை! RCB-யின் மாஸ் வெற்றியைப் பாராட்டி நெகிழ்ந்த MSD
இதையும் படிங்க: இபிஎஸ் வீட்டில் அரசியல் விருந்து.. அடுத்தது என்ன? பியூஷ் கோயலுடன் முக்கிய ஆலோசனை!