திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம்.
இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.

இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமி திருவண்ணாமலைக்கு பாட்டி வீட்டிற்கு சுப நிகழ்ச்சிக்காக சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அடித்த புகாரி அடிப்படையில் தடயவியல் நிபுணர்களுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
இதையும் படிங்க: "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!
உறவினர் வீட்டிற்கு சுப நிகழ்ச்சிக்காக சென்ற பதினைந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எட்டு பேர் கொண்ட கும்பல் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாலியல் குற்றமும்... மரண தண்டனையும்..! கவனத்தை ஈர்த்த திமுகவின் வாக்குறுதி..!