காவிரிப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் முதலமைச்சர் விஜய் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரின் மௌனம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள இக்கட்டான சூழலில், முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள 6 முக்கியமான கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையின் விவரங்கள் பின்வருமாறு

முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்
பிரதமரைச் சந்திக்காதது ஏன்?: தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில், இதுகுறித்து பிரதமரிடம் நேரில் பேசாதது ஏன்?
இதையும் படிங்க: நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!
நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்கிறார்?: டெல்டா பகுதிகள் காய்ந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
கர்நாடக அரசு மீது என்ன பயம்?: தமிழ்நாட்டிற்கு உரியத் தண்ணீரைக் கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துக் தட்டிக் கேட்க முதலமைச்சருக்கு என்ன பயம்?
அனைத்துக்கட்சிக் கூட்டம் எப்போது?: காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை ஏன் இன்னும் கூட்டவில்லை?
சட்டமன்றத் தீர்மானம் என்னானது?: மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிக்க நேரமில்லாமல் முதலமைச்சர் இருப்பது ஏன்?
விவசாயிகளுக்கான நிவாரணம் எங்கே?: குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுத் தவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?
காவிரி டெல்டாவின் தற்போதைய நிலைமை குறித்து மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஏற்கெனவே முழு கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டது இந்தத் தவெக அரசு. தற்போது குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், முதலமைச்சர் உடனடியாகப் பிரதமரைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் முதலமைச்சரும் பேசவில்லை; நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை.
தவெக அரசு தனது அர்த்தமற்ற மௌனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு 'புதிய நிவாரணத் தொகுப்பினை' உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநில உரிமைகளை தொட்டால் விடமாட்டோம்! புதிய சட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!