காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: காஷ்மீர் மசூதியில் குண்டு வெடிப்பு.. அமைதி திரும்பிய சமயத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்..!
இருந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்து பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கியது இந்தியா.
அதுமட்டும் அல்லாமல் இந்தியாவிற்குள் ஒளிந்து கொண்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகள், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் லோக்கல் பயங்கரவாதிகள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் பிஹாலி பசந்த்கர் வனப்பகுதியில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கவராதிகள் நீண்ட நாட்களாக பதுங்கியுள்ளனர். அவ்வப்போது வெளியே வரும் பயங்கரவாதிகள் பல்வேறு சதிச் செயல்களுக்கு காரணமாக இருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது. இதை அடுத்து, அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
நம் ராணுவ வீரர்கள் பசந்த்கர் வனப்பகுதிக்குள் பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடினர். அப்போது, அங்கு பயங்கரவாதிகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. காட்டுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நம் வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கி சண்டையில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் மூன்று பேர் காட்டுக்குள் பதுங்கியிருப்பதை ராணுவம் உறுதி செய்தது. தொடர்ந்து அவர்களையும் பிடிப்பதற்கான நடவடிக்கையை ராணுவ வீரர்கள் மேற்கொண்டுள்ளனர். உதம்பூருக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: நாமெல்லாம் இஸ்லாமிய நாடுகள்.. இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ணலாமா? மலேசியாவுக்கு தூதுவிட்ட பாக்.,!