தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் காவல்துறை தினறல் எட்டாவது நாளாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் உறவினர்கள் போராட்டம் காவல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வழக்கை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடத்த பத்தாம் தேதி வீட்டில் இருந்து மாலை வெளியே சென்றிருந்த நிலையில் காணாமல் போனால் இந்த நிலையில் 11-ம் தேதி மாலை உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளுடன் மாணவி உடல் சடலமாக மீட்கப்பட்டது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனிடையே உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. மாணவியின் பின் தலையில் தாக்கப்பட்டு கழுத்தில் எலும்பில் முறிவு இருந்ததால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் வலியுறுத்தி தொடர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... தொடரும் இழுபறி..! தொகுதி பங்கீட்டு பஞ்சாயத்தை முடிக்க டெல்லிக்கு பறந்த EPS..!!
குற்றவாளிகள் யாரையும் அடையாளம் கண்டு கைது செய்ய முடியாமல் திணறி வரும் காவல்துறை, தற்போது இந்த வழக்கில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக 5 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேரின் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் 9வது நாளாக இன்று மாணவியின் உடலை மாணவியரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொட்டும் மழையில் அங்காளம்மன் ஊஞ்சல்..!! வேட்பாளர் பட்டியலை அம்மன் பாதத்தில் வைத்து வணங்கிய புஸ்ஸி ஆனந்த் ..!