2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாற்றுக் கட்சிகளை இணையும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. திமுகவில் இருந்து அதிமுகவிற்கும், அதிமுகவிலிருந்து திமுகவிற்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் என மாறி மாறி இணையும் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், நடிகை லதா அதிமுகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அவர் கட்சியில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த நடிகை லதா, பூங்கொத்து கொடுத்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது கட்சியின் பழைய உறுப்பினர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

நடிகை லதா தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக அறியப்பட்டவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடன் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அதிமுக கட்சி தொடங்கப்பட்ட சமயத்தில், அதன் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவராக இணைந்தவர் இவர். எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலுக்கு அழைக்கப்பட்ட போதிலும், அப்போது அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை.
இதையும் படிங்க: அப்படிலாம் இல்ல... பிரதமருக்கு தமிழ் மீது நிறைய பற்று... வரிந்து கட்டிய EPS..!!
பின்னர் சிங்கப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், தமிழகத்திற்குத் திரும்பிய பிறகுகட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இது அவரது எம்.ஜி.ஆர். விசுவாசத்தை மீண்டும் நினைவூட்டியது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் அடித்தளத்தை விரிவாக்கும் வகையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. இனி அவர் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்? EPS தலைமையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..! முக்கிய ஆலோசனை..!!