தமிழ்நாட்டில் மாநிலங்களவைக்கான இரு ஆண்டுக்காலத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் நாளை மறுநாள் நிறைவடைய உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 6 மாநிலங்களவை இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 4 இடங்களையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 2 இடங்களையும் எளிதாகப் பெறும் நிலை உள்ளது.
வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை எந்தக் கட்சியும் வேட்பாளர்களை உறுதிப்படுத்தி அறிவிக்கவில்லை. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் கூட்டணி கட்சிகளோடு இறுதி செய்யப்படாத நிலை நீடித்து வருவதால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

2 இடங்களில் ஒன்றை பாமகவுக்கு ஒதுக்கவும், மற்றொன்றில் முன்னாள் துணை சபாநாயகர் மு. தம்பிதுரையை மீண்டும் நிறுத்தவும் அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிங்க: நாங்க STRONG... திமுக கூட்டணியில் தான் குழப்பம்... EPS தடாலடி..!!
இதனிடையே, நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. தேர்தல் பணிகள், ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது குறித்தும், ராஜ்யசபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: All the best..!! 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... EPS, விஜய், சீமான் மாணவர்களுக்கு வாழ்த்து..!!