மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி. வெங்கடாஜலம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2 1/2 வயது குழந்தை முதல் 60 வயது குழந்தை வரை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர்.திமுகவை சேர்ந்த கனிமொழி, கீதாஜீவன்,தமிழச்சி தங்கபாண்டியன்ஆகியோர் வெற்றி பெற்றால் போதாது. தமிழ்நாட்டுப் பெண்கள் பாதுகாப்பு இருந்து வெற்றி பெற வேண்டும்.
திமுகவின் ஆட்சி காலம் முடியும்போது தமிழ்நாட்டு மக்கள் வெறுப்பாக இருப்பது வரலாறுதிமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வராது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு பொய் பேசும் பழக்கம் கிடையாது உண்மை மட்டுமே பேசுவார். ஸ்டாலின்அவரது மகனும் பேசும் பொய்யை சேர்த்து வைத்தால் ஒரு லைப்ரரி ஆரம்பிக்கலாம். தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர், துணை முதல்வர் இருவர் மட்டுமே ஆட்சி செய்கின்றனர் இருவரும் பொது மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை.
ஊருக்கு உழைப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளருக்கு எடப்பாடியார் என மக்கள்பட்டம் கொடுத்துள்ளனர்.அப்பா தயவில் வந்ததால் ஸ்டாலினுக்கு கருணாநிதி என்பது அடையாளம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நான்கரை ஆண்டு காலம் மக்களுக்காக மக்களாட்சி நடத்தியவர் . மக்களுக்காக திட்டம் தீட்டுபவர்கள் அதிமுகவினர் குடும்பத்திற்காக கொள்ளையடிக்க திட்டம் தீட்டுபவர்கள் திமுக,வினர்
கொரோனா நோய் தொற்று காலத்தில் வரி உயர்த்தாமல் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தார் உதவி தொகை, நல்லாட்சி கொடுத்தவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி.
இதையும் படிங்க: மகளிரை அவமதிக்கிறது அதிமுக..!! EPS மன்னிப்பு கேட்கணும்..! திமுக பெண் நிர்வாகிகள் கொந்தளிப்பு..!
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததுக்கு காரணம் தமிழ்நாட்டுப் பெண்கள் போட்ட பிச்சை. அதனால் தான் ஸ்டாலின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக ஆயிரம் ரூபாய் தருவதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனை நம்பி தமிழக பெண்கள் திமுகவிற்கு ஓட்டு அளித்தனர் என சரமாறியாக சாடினார்.
தேர்தல் அறிக்கையில் ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவித்த ஸ்டாலின் 28 மாதங்கள் கழித்து வழங்கினார் ஆனால் தகுதியான பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார்.திமுக கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றுவதில்லை திமுகவினர் கொடுக்கும் கூப்பனும் செல்லாது.திமுகவினர் கொள்ளையடிப்பதற்கு விஞ்ஞானபூர்வமாக ஏமாற்றுவார்கள்.
50 ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்தால், 2031 வரைஸ்டாலின் உயிரோடு இருந்தால்,தகுதியான பெண்கள் இருந்தால் மட்டுமே எட்டாயிரம் ரூபாய் டோக்கன் செல்லும்எனது திமுகவினர் கூறுவார்கள்.திமுக தேர்தல் வந்தால் மட்டுமே வருவார்கள் தேர்தல் வரும் போது மக்களின் காலை பிடிப்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் கழுத்தை பிடிப்பார்கள் அவர்களை நம்ப வேண்டாம். தேர்தல் சமயத்தில் நகை கடன் பயிர் கடன் விவசாய கடன் காலை கடன் கூட தள்ளுபடி செய்வோம் என கூறுவார்கள் ஆனால் எதையும் செய்ய மாட்டார்கள் எனக்கூறினார்.
இதையும் படிங்க: இல்லத்தரசி திட்டம் தான் தேர்தலின் "சூப்பர் ஸ்டார்"..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!