சென்னை எழும்பூர் நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். விளையாட்டு துறைக்கு புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. அரங்கத்தின் கட்டுமானப் பணிகள், ஹாஸ்டல் வசதிகள், உணவின் தரம், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தேவைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்ட அவர், பயிற்சியில் ஈடுபட்டிருந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் நெருக்கமாகக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஒரு காலத்தில் இதே நேரு ஸ்டேடியத்தில் ஹாஸ்டல் மாணவராகவும் விளையாட்டு வீரராகவும் இருந்த தான், இப்போது அமைச்சராக இங்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“இது என் வீடு மாதிரி” என்று உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். விளையாட்டு வீரர்களின் எதிர்காலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை குறித்து அவர் வலியுறுத்திய அறிவுரைகள் இளைஞர்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளன. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், “அரியர்ஸ் வைக்காதீங்க” என்று உறுதியாகக் கூறினார்.
இதையும் படிங்க: நம்பிக்கை வீணாகாது... செயலால் பேசுவேன்..! வாக்களித்த மக்களுக்கு ஆதவ் அர்ஜுனா உறுதி..!
“எல்லாரும் அரியர்ஸ் இல்லாம டிகிரி முடிங்க. அப்ப தான் நல்ல அரசு வேலை கிடைக்கும். SI பதவி கிடைக்கும். இல்லன்னா 15 வருசமும் கான்ஸ்டபிளா தான் இருக்கணும்” என்றார். தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள் இங்கிலீஷ் கற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதைச் சுட்டிக்காட்டிய அவர், “தமிழ் மீடியத்துல படிச்சா இங்கிலீஸ் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். ஆனா அந்த தயக்கத்துல இருந்து வெளியே வந்து இங்கிலீஷ் கத்துக்கணும்” என்று ஊக்குவித்தார்.
இதையும் படிங்க: அதிகார திமிர்... வாரி கொட்டிய ஊழல் பணம் வீணா போச்சா..? ஆதவ் அர்ஜுனா கருத்து..!!