தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கு P. முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது கட்சியின் தலைமை. வானூர் தொகுதியில் முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியலில் பேசப் பொருளாக மாறி இருக்கிறது.
வானூர் தொகுதி நீண்டகாலமாக அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இடம். கடந்த பல தேர்தல்களிலும் இங்கு அதிமுக வெற்றி பெற்று வந்துள்ளது. இம்முறை தொகுதியைத் தக்கவைக்கும் வகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரணத் தொண்டருக்கு வாய்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.P. முருகன் என்பவர் அதிமுகவில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒரு அடிமட்டத் தொண்டர்.

குறிப்பாக, 'அம்மா கலைக்குழு' என்ற பெயரில் கழக நிகழ்ச்சிகளில் மேடைப் பாடகராகப் பங்கேற்று, கட்சியின் பிரச்சாரங்களில் இசை மூலம் தொண்டர்களை ஈர்த்து வந்தவர். ஜெயலலிதா பாணியில், ஏழை மற்றும் சாதாரண பின்னணியிலிருந்து வரும் தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இவருக்கு டிக்கெட் வழங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: கோவை அதிமுக கோட்டை... திமுக ஆட்சியில் குப்பைக்கு கூட வரி..! எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!
இது அதிமுகவின் பாரம்பரியமான 'அம்மா'வின் தொண்டர் நலன் சார்ந்த அணுகுமுறையை நினைவூட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது.வானூர் தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தனித் தொகுதியாக செயல்படுகிறது. கடந்த 2021 தேர்தலிலும் அதிமுக இங்கு வலுவான நிலையில் இருந்தது. தற்போது 2026 தேர்தலுக்கு அதிமுக 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எங்க கட்சிக்கு வாங்க..! விஜயே கூப்பிட்டாராம்..! அதிமுக EX. அமைச்சருடன் பேச்சுவார்த்தை..!