சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசி வெளியிட்டுள்ள காணொலியில், மத்திய , மாநில அரசுகளின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளை காப்பாற்றும் தந்தையின் வருமானத்துடன், தாயும் அன்பும் இரண்டற கலந்து இருக்க வேண்டும். அதேபோல மத்திய அரசு தந்தையாகவும்,மாநில அரசு தாயாகவும் இருந்து மக்களாகிய குழந்தைகளை கண் இமை போல காத்தால் நாடு சுபிட்சம் அடையும் நாடு வளர்ச்சி அடையும்.
அதை விடுத்து தாயும், தந்தை உறவில் இடைவெளி ஏற்படும் பொழுது விவகாரத்தை கேட்டு தாயும் தந்தையும் போராடிக் கொண்டிருந்தால் அந்த குழந்தைகள் அனாதையாகி, ஆதரவற்றதாகி உருவாக்கக்கூடிய பாதையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்
நமக்குள் ஆயிரம் ஈகோ பிரச்சனை இருந்தாலும், மக்கள் உரிமைக்காக திட்டங்களையும் ,வளர்ச்சிகளையும், நிதிகளையும் பெற மத்திய அரசை அணுகி உரிமையை பெற்றுத்தர வேண்டும் தவிர விவகாரத்தை கேட்டு போராடிக் கொண்டிருந்தால் குழந்தைகள் எதிர்காலம் கேள்விக்குறியாயும்.
இதையும் படிங்க: கோவிலுக்குள் கட்டு கட்டாய் சிக்கிய SIR படிவங்கள்... அதிமுக சூழ்ச்சி அம்பலம்...!
இதனால்தான் மெட்ரோ ரயில் திட்டத்தில் பெற வாய்ப்பு இருந்தும் அதை நழுவுவிட்டோம் ,மேகதாது அணை கட்டுவோம் என்ற தீர்ப்பை பெற்றார்கள், முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவோம் எனும் சூளுரை செய்கிறார்கள், கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு அதை மீட்க முடியாமல் மீனவர்கள் தினமும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் இதையெல்லாம் முதலமைச்சர் சிந்தித்துப் பார்த்து வேண்டும்.
தற்போது 21 ஆண்டுகளாக வாக்காளர்கள் சிறப்பு சீர்திருத்த பட்டியல் செய்யாமல் இருந்ததால் பல்வேறு குளறுபடிகள் இருந்து வந்தது இந்த குளறுபடிகள் எல்லாம் சரி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேர்வு வைக்கும் முன்பு எத்தனை பேர் பெயில் ஆவார்கள் என மனக்கணக்கு போட்டு தேர்வு எழுத மாட்டோம் என்று குழந்தைகள் அடம்பிடிப்பது போல, இன்றைக்கு எஸ்.ஐ.ஆர்.பணிக்கும் தேர்வுக்கு செல்லாமல் அடம்பிடிக்கும் குழந்தை போல திமுக அடம்பிடித்து வருகிறது.
எஸ். ஐ .ஆர். பணியில் தமிழகத்தில் ஒரு கோடி பேர் ஓட்டுரிமை இழப்பார்கள் என சில அரசியல் கட்சிகள் அச்சுறுத்தி வருகிறார்கள். இறந்தவர்கள்பெயர், ஒருவர் பெயரில் பல வாக்காளர் அட்டை இதுபோன்ற குளறுபடிகளை களையத்தான் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
அதே போல வாக்காளர் அடையாள அட்டையில் பழைய படங்கள் உள்ளது அதை எல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .இந்த ச்ர் திருத்த நடவடிக்கைக்கு அதிமுக வரவேற்பு அளித்து வருகிறது இதனால் கள்ள ஓட்டு நிச்சயம் களையப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவந்த பின்பு நிறை ,குறைகள் எல்லாம் அலசி ஆராய்ந்து தேர்தல் ஆணையத்திடம் நாம் சுட்டிக் காட்டலாம். தகுதியான நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க கூடாது அதேபோல தகுதி இல்லாதவர் யாரும் இடம் பெறக் கூடாது என்பதுதான் இந்த நோக்கம்
இதையும் படிங்க: "மக்கள் குழப்பமடைய வேண்டாம்... அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" - சர்ச்சைக்கு எண்டு கார்டு போட்ட தம்பிதுரை...!