அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி ஏப்ரல் 23ம் நோக்கி அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளானது தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன என்ற ஒரு எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்திருக்கிறது.
இந்நிலையில் பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 17லிருந்து 18 தொகுதிகள் என்ற அளவில் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது 18 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு, எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான தொகுதி பங்கீடு என்பது இன்னும் சற்று நேரத்தில் உறுதியாக இருக்கிறது. அனைத்து கட்சிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய நிகழ்ச்சயானது அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லவுள்ளனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் 18 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு..! இன்றைய தினம் புதிய துவக்கம்... பியூஷ் கோயல் உற்சாகம்..!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி இணையும் போதே இந்த தொகுதி எண்ணிக்கை குறித்தெல்லாம் பேசப்பட்டுவிட்டது என்றும், அப்போதே எடுத்த முடிவின்படி ஒரு மாநிலங்களவை சீட் அன்புமணிக்கு வழங்கப்பட்டது. அதைப்போலவே ஏற்கனவே உறுதி செய்யப்பட்டபடி 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது ஒருங்கிணைந்த பாமக இருந்த நிலையில் மொத்தம் 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் தற்போது தந்தை மகன் என இரு அணிகளாக பிரிந்திருக்கக்கூடிய சூழலில் அந்த எண்ணிக்கை என்பது 18 ஆக சுருங்கியுள்ளது. ஆனாலும் கூட இந்த 18 எண்ணிக்கைக்கு அன்புமணி தரப்பில் ஒரு திருப்தியான தகவல்களாகவே தெரிவிக்கிறார்கள். மேலும் கடந்த முறை போட்டியிட்ட அந்த 23 தொகுதிகளில் இருந்து தான், இந்த 18 தொகுதிகள் பெரும்பாலும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு கையெழுத்து?... முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்..!!