மத்தூர் அருகே ஈச்சர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், பிக் அப் வேன், கார் அடுத்தடுத்து மோதி விபத்து - இந்த விபத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் கலந்துகொண்டு ஈச்சர் வாகனத்தில் ஊர் திரும்பிய 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேருந்து நிலையத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்தூர் அடுத்த மயிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் ஈச்சர் வாகனத்தில் கூட்டம் முடிந்து ஊருக்கு திரும்பினர்.
அப்பொழுது மத்தூர் அடுத்த கண்ணன்டஹள்ளி அருகே அத்திகானூர் கிராமம் வழியே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பிக்கப் வாகனம் ஈச்சர் லாரியின் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த சமயம் ஈச்சர் லாரியின் பின்னால் வந்த கார் ஒன்றும் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: குழிக்குள் விழுந்த ரோபோ டாக்சி.. ஏணியை பிடித்து மேலே வந்த பெண் பயணி.. என்ன நடந்தது..?
இந்த கோர விபத்தில் ஈச்சர் லாரியில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் கார் மற்றும் பிக்கப் வாகனத்தில் இருந்தவர்களும் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை அந்த வழியாக வந்த வாகனங்கள், கார் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் உள்ள மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக சாலையில் கவிழ்ந்து கிடந்த மூன்று வாகனங்களையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதிமுக கூட்டம் முடிந்து வரும் வழியில் நடந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... லாரி மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி...!