• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”நடிகன் அவன்.. அப்படி என்ன சாதிச்சான்...” - சி.எம்.விஜய்யை ஒருமையில் விளாசிய செல்லூர் ராஜு...!

    யாருமே எதிர்பாக்காமல் ஜாக்பாட் போல ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய மைனாரிட்டி ஆட்சிதான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள்.
    Author By Amaravathi Thu, 03 Sep 2026 15:05:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK sellur raju slams cm vijay

    ஜல்லிக்கட்டு குறித்து தவறாக பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையாவை மற்றும் தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர். பி உதயகுமார் மற்றும் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்துவரப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

    ஆர்ப்பாட்டத்தின்போது தவெக எம்எல்ஏ மற்றும் தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ :   தமிழகத்தில் என்றைக்கு ஆட்சி மாற்றம் வந்ததோ GENZ தலைவர் என்றைக்கு வந்தாரோ இயற்கையே வாட்டி வதைக்கிறது; காலபருவங்கள் மாறிக்கொண்டு இருக்கிறது 

    யாருமே எதிர்பாக்காமல் ஜாக்பாட் போல ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய மைனாரிட்டி ஆட்சிதான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்கள். படையப்பா படத்தில் வருவது போல மாப்பிள்ளை அவரு சட்டை என்னோடது என்பது போல உள்ளது. இந்த ஆட்சியில் முதலமைச்சர் விஜய் ஏதாவது புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறாரா? மக்கள் பாராட்டும்படி செய்திருக்கிறாரா ?

    இதையும் படிங்க: காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

    அதிமுக ஒன்றுதான் பாரம்பரியத்தை காத்த இயக்கம் அதிமுக மட்டும் தான் வரலாற்றை,் மொழியை காத்த இயக்கம், அறிவியல் பல்கலைக்கழகங்களை கொண்டு வந்தது அதிமுக ஆட்சி. ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்தது காங்கிரஸ்; ஜல்லிக்கட்டு காளையை காட்சி விலங்குகள் பட்டியலில் கொண்டு வந்தது காங்கிரஸ்; அதனை ஆணித்தனமாக எதிர்த்தவர் ஜெயலலிதா. 

    ஜெயலலிதா இருக்கும் வரை ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தப்பட்டது ; எடப்பாடி யார் முதலமைச்சராக இருக்கும்போது  அவசர சட்டத்தை இரவோடு இரவாக சட்டமன்றத்தில் இயற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி மத்திய அரசின் ஒப்புதலை பெற்று பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் ஆணையைப் பெற்று அன்றைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது என்றால் அது சாதாரணமல்ல;

    உலக வரலாற்றில் இளைஞர்களின் எழுச்சியை காண முடிந்தது தமிழகத்தில் தான் இதுபோன்ற மொழிக்காகவும் தனது இனத்தின் பெருமை பறைசாற்றுகின்ற ஜல்லிக்கட்டு போட்டிக்காகவும்  தமிழகமெங்கும் இளைஞர்கள் படையெடுத்தார்கள் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்தனர்

    அதனடிப்படையில் இரவோடு இரவாக சட்டம் இயற்றப்பட்டு அதனை நடத்தி காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி.  ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து தடையின்றி நடக்குது என்றால் அதற்கு அம்மா தான் காரணம். மெர்சல் படத்தில் GENZ தலைவர் விஜய் காளையை அடக்குவதை காண்பித்தார்

    அந்த ஜல்லிக்கட்டு பற்றி இழிவாக தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் என்றால் உடனடியாக எழுந்து அதனை கண்டித்திருக்க வேண்டுமா? இல்லையா?. இப்போது எதுவுமே செய்வது கிடையாது ரீல்ஸ் போடுவதிலேயே போய்விடுகிறது ரியல் ஆட்சிக்கு வாங்கடா என்றால் வரமாட்டிக்கிறார்கள். நான் ஏதாவது சொன்னால் எதையாவது ஓட்டி விடுகிறார்கள் அது வேற பயமாக இருக்கிறது.

    திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய்க்கு ஏன் அளவுகோல் வைக்கிறீர்கள் என கேட்டார்கள் அதையேதான் இப்போது எப்படி நிர்ணயம் செய்கிறீர்கள். அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி என சொன்னீர்கள் செய்தீர்களா?

    KEY கொடுத்தால் பாடக்கூடிய ஆடக்கூடிய பொம்மையைப் போல ஒரு முதலமைச்சர் உள்ளார. முதல் நாள் rehearsal எடுத்தால் தான் அடுத்தநாள் அதனைப் பற்றி பேசுகிறார். ஒரு முதலமைச்சருக்கு  கோப்புகள் அனைத்தும் வந்துவிடும் நாளைக்கு என்ன துறை சாதனைகளை குறைபாடுகளை எடுத்து சொல்வார்கள் இதுதான் வரலாறு. இதனை MGR, அம்மா, கலைஞர், எடப்பாடி, தளபதி மு க ஸ்டாலின் கூட பதில் சொன்னார். 

    முதலில் அமைச்சர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கடா சண்டாள பசங்களா வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றத்தில் அமைச்சருக்கே தமிழ் வாசிக்க தெரியவில்லை. சட்டமன்றம் மழலையர் மன்றமாக மாறிவிட்டது தலைமையேற்றுபவரும் அப்படித்தான் இருக்கிறார் 

    சட்டமன்றத்தில் எடப்பாடி கோல் அடிக்கிறார் உதயநிதி அடித்து பார்க்கிறார் ; அதிமுக என்றைக்கும் சட்டமன்றத்தில் மட்டுமல்ல தமிழக மக்களிடையே உள்ளங்களிலும் முதலிடத்திலே இருக்கிறது. வரம் கொடுத்தவன் தலையிலயே கை வைப்பார்கள் என்று சொல்வது போல ஆதரவு கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே இருக்கிறார்கள் தவெக; அது நியாயமாப்பா 

    அடுத்து பாரத பிரதமர் என ரீல்ஸ் ஓட்டுகிறார்கள் அதனையும் லட்சக்கணக்கான மக்கள் பார்க்கிறார்கள் இதையெல்லாம் கேட்க வேண்டியது நமது தலையெழுத்து. மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டு இந்த கொழுப்பா? கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டத்திற்கு போனான் என்பது போல உள்ளது

    அரிச, எண்ணெய், பருப்பு விலை கூடிவிட்டது வெங்காய விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் துறை அமைச்சராக இருந்தபோது அம்மா  ஆட்சியில் எகிப்திலிருந்து வெங்காயம் வாங்கி வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்தோம். அதுதான் மக்களுக்கான அரசு. அரிசியை மேற்கு வங்காளத்தில் வாங்கி வந்து 20 ரூபாய்க்கு விற்றோம். விலைவாசியை கட்டுப்படுத்தினோம். வெங்காய பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். அதுபோன்று ஏதாவது செய்கிறீர்களா ?

    தமிழனுக்கு மூளை இருக்கா? இல்லையா நடிகன் அவன் என்னடா சாதித்தான் என்ன கருத்தை சொன்னான் இதுவரைக்கும் என்ன செஞ்சான்?. தமிழ்நாட்டு மக்களுக்கு எத்தனை பேரிடர் புயல் வந்திருக்கிறது இவன் என்ன செஞ்சான். எதை வைத்துடா அவனை தேர்ந்தெடுத்தீர்கள் அறிவில் சிறந்தவன ஆற்றலில் சிறந்தவனா கதாநாயகனா சிறந்தவனா எது தான் வந்தது. பெண்களை இழிவு படுத்துவது எங்களுடைய நோக்கம் அல்ல 

    41 பேர் உனக்காக உயிரிழந்தவர்களுக்கு அரசு பணியாணை இதற்கு உயர்நீதிமன்றம் சம்மட்டியால் அடித்தது தவறு என சொல்கிறார்கள். இந்த ஆட்சியில் எதை செய்வது என்ற எந்த அறிவும் இல்லை. எம்ஜிஆர் போல நீங்கள் ஆகிவிட முடியுமா?.

    உலகத்தில் MGR ஒருத்தர் தான் இருந்தார் வாழும்போதும் இருந்தும் கொடுத்தார். நீ அப்படியா நீ  நடித்த படத்தின் உண்மையான தொகையை கூட காமிக்காதவர் GENZ தலைவர் உன்னை எத்தனை தடவை மத்திய அரசு கண்டித்து இருக்கிறது. 

    மதுரையில் ஒன்றிய செயலாளருக்கு பகுதி செயலாளருக்கு வார்டு செயலாளரருக்கு இவ்வளவு கவுன்சிலருக்கு இவ்வளவு என மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகிறார்கள். நீ எங்கே ஊழலை அடக்க போகிறாய்; உங்க கட்சியில் உள்ள ஊழலையை அடக்க முடியவில்லை. முதலில் பயிற்சி முகாம் நடத்துங்கள் GENZ தலைவருக்கு சொல்கிறேன் உங்களை உட்கார வைத்து விட்டோம் ஓட்டுகிற அளவிற்கு ஓட்டுங்கள் இருக்கிற அளவுக்கு கேட்கிறோம் ஆட்சி மாற்றம் வரும் போது மக்கள் பார்த்து முடிவு செய்வார்கள் என்றார். 

    இதையும் படிங்க: ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.! ஒலிம்பிக் நகரம், மோட்டார் சிட்டி..!! பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share