அதிமுக கட்சி அமைச்சர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்துள்ளது. கட்சி வெளியிட்ட அறிக்கையில், கேடுகெட்டத்தனம் என்றால் என்னவென்று அமைச்சருக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று கூறுவது கேடுகெட்டத்தனம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. மின்வெட்டைப் பற்றிக் கேட்டால், பஞ்சாபில் பதினாலு மணி நேரம் மின்வெட்டு உள்ளது என்று பதிலளிப்பது போன்ற செயல்கள் கேடுகெட்டத்தனம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்வெட்டை சாக்காகக் காட்டி கொள்ளை விலைக்கு வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்து அதில் கமிஷன் பேசுவதும் கேடுகெட்டத்தனம் என்று அதிமுக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகத்தைப் பார்க்க வந்த மக்களை கோபுர தரிசனம் கூட கிடைக்காமல் அவதியுறச் செய்ததும், குடமுழுக்குக்கான பாஸ்களை பிளாக் டிக்கெட் போல விற்பதும் கேடுகெட்டத்தனம் என்று கட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் மற்றும் வரப்போகும் அனைத்துக் கட்சிகளின் கரை வேட்டிகளையும் தனது பீரோவில் தயாராக வைத்துள்ள நிர்மல் குமார் கேடுகெட்ட என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாமா என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. உங்கள் பீரோவில் இன்னும் பத்திரமாக இருக்கும் அண்ணா திமுக வேட்டியைப் பாருங்கள் மிஸ்டர் மினிஸ்டர் என்று நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: வீடியோ இருந்தும் விசாரணை நிறுத்தம்... வீரமணி விவகாரம்..! திமுகவை வெளுத்த அமைச்சர் நிர்மல் குமார்..!!
எடப்பாடியார் எனும் ஆளும என்று ஹேஷ்டேக் போட்டு எடப்பாடியார் ஃபாரெவர் என்று கவர் பிக் வைத்து எடப்பாடியார் வீட்டு வாசலில் காத்திருந்த காலமெல்லாம் நினைவில் இருக்கட்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாவை அடக்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் அடக்கப்படுவீர்கள் என்று அதிமுக எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: நிர்மல் குமார் நிர்வாகத்தில் தடுமாறும் மின்சாரம்.. பகலிலும் பவர்கட்! தமிழக மக்கள் அவதி!!