உலகத்தையே அதிர வைத்த ஆமதாபாத் விமான விபத்தில் இன்னும் மர்மம் விலகவில்லை. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய 171 ரக விமானம், டேக் ஆப் ஆன ஒரு நிமிடத்துக்குள் விபத்துக்குள்ளானது. ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் மெஸ் பில்டிங் மீது விழுந்து வெடித்தது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் இறந்தனர். ஒருத்தர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் விழுந்ததில் கல்லூரி மெஸ், விடுதியில் இருந்த மேலும் 33 பேர் மரணம் அடைந்தனர். மொத்த பலி 274 ஆக உயர்ந்தது.
உலகை உலுக்கிய விமான விபத்து எப்படி நடந்தது என்று இப்போது வரை தெரியவில்லை. பொதுவாக 3000 முதல் 4000 அடி உயரத்தில் விமானம் பறக்கும். அவ்வளவு உயரத்துக்கு டேக் ஆப் செய்ய வேண்டும். ஆனால் 645 அடி விமானம் சென்ற போதே சட்டென கீழே இறங்கி விழுந்து நொறுங்கியது. கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட பைலட் மேடே அலர்ட் விடுத்து இருந்தார். இது விமானம் ஆபத்தில் சிக்கி இருப்பதை சொல்ல பயன்படுத்தும் ஒரு அபாய வார்த்தை. இதை சொன்ன மறுநொடியே விபத்து நடந்து விட்டது.
எனவே பிளாக் பாக்ஸ் கிடைத்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்று முதலில் சொல்லப்பட்டது. விமானம் துவக்கம் முதல் விபத்து வரை எந்த நேரத்தில் எவ்வளவு வேகம், எவ்வளவு உயரத்தில் சென்றது என்பதை எல்லாம் இதை வைத்து கண்டுபிடிக்கலாம். தற்போது இதிலிருந்து தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: விமானம் விபத்தான இடத்தில் கொட்டிக் கிடக்கும் தங்கம்..! அள்ள அள்ள வரும் நகைகளால் அதிர்ச்சி..!

கருப்புப் பெட்டி, அதாவது விமானத் தரவு பதிவு (FDR) மற்றும் விமானிகளின் குரல் பதிவு (CVR) கொண்ட Enhanced Airborne Flight Recorder (EAFR), விபத்துக்குப் பின் ஜூன் 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மீட்கப்பட்டு, ஜூன் 23 அன்று அமெரிக்க NTSB இலிருந்து பெறப்பட்ட கருவிகள் மூலம் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. CVR இல் ஒரு விமானி மற்றொருவரிடம், “நீங்கள் ஏன் எரிபொருளை அணைத்தீர்கள்?” என்று கேட்க, மற்றவர், “நான் அணைக்கவில்லை” என்று பதிலளித்தது பதிவாகியுள்ளது, இது விமானிகளிடையே குழப்பத்தை வெளிப்படுத்துகிறது.
இதுகுறித்து விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) இன்று 15 பக்க முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட மூன்று வினாடிகளில் (08:08:42 UTC) இரு எஞ்சின்களுக்குமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் “RUN” நிலையில் இருந்து “CUTOFF” நிலைக்கு ஒரு வினாடி இடைவெளியில் மாறியதால், எஞ்சின்கள் செயலிழந்தன. இதனால் விமானம் உயரம் இழந்து, விமான நிலைய எல்லைக்கு அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி தீப்பிழம்பாக வெடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானிகள் சுவிட்சுகளை மீண்டும் “RUN” நிலைக்கு மாற்ற முயன்றனர். எஞ்சின் 1 ஓரளவு மீட்கப்பட்டாலும், எஞ்சின் 2 மீட்கப்படவில்லை. இதனால், Ram Air Turbine (RAT) தானாக இயங்கியது, ஆனால் குறைந்த உயரம் காரணமாக விமானத்தை காப்பாற்ற முடியவில்லை. 08:09:05 UTC இல் “MAYDAY” அழைப்பு விடுக்கப்பட்டு, 08:09:11 UTC இல் தரவு பதிவு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2018 இல் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) வெளியிட்ட Special Airworthiness Information Bulletin (SAIB), போயிங் 737 விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளின் பூட்டு அமைப்பு தவறாக விடுபடுவதற்கான சாத்தியத்தை எச்சரித்திருந்தது. டிசம்பர் 2018 வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது.
இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது. அகமதாபாத்தில் விபத்தை ஏற்படுத்திய போயிங் 737-8 விமானத்திலும் இதே சுவிட்ச் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது வெறும் ஆலோசனையாக இருந்ததால், ஏர் இந்தியா இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.
இதையும் படிங்க: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!