கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்ற உத்தரவின்பேரில், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் மூன்றாவது முறையாக கடந்த 15ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்காக ஆஜரானார்.
இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. விசாரணை முடிந்து மாலை 6 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார்.அலுவலகம் முன்பு குவிந்திருந்த தவெக தொண்டர்கள், அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். தனது காரின் மேல்பக்கத்தை திறந்து வெளியே வந்து, தொண்டர்களைப் பார்த்து விஜய் உற்சாகத்துடன் கையசைத்தார். சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கு விஜய் பதிலளித்ததாகவும், புதிதாக சில கேள்விகளை சிபிஐ இணைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் கேள்வி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமக்கல், கரூர் கூட்டம் ஜனநாயகன் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்வி சிபிஐ விசாரணையில இடம் பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் சிபிஐ அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலையே விஜய் அளித்ததாக கூறப்படுகிறது. என்ன நேரம் சொல்லி இருந்தீங்க? எத்தனை மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டீங்க? கரூர்ல பகல் 12 மணிக்கு பிரச்சாரம் என புஸ்ஸி ஆனந்த அறிவித்தது பற்றி உங்களுக்கு தெரியுமா? என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய் பங்கேற்கும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..!! கட்சி தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
அப்போது விஜய், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அந்த கூட்டத்தை ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தினீங்களா?, கட்சி தரப்பில இருந்து அறிவிக்கப்பட்ட நேரம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? சென்னையில இருந்து நீங்க கிளம்புறப்போ நேரம் இதுவாக இருந்ததா? அங்க நீங்க சென்றிருக்க வேண்டிய நேரம் என்னவா இருந்தது? போன்ற கேள்விகளையும் சிபிஐ எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்துக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜிவிடம் 6 மணி நேரம் துருவி துருவி விசாரணை..!!