அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப்பாய்வது என்பது தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டின் உச்சகட்ட உணர்ச்சி நிறைந்த காட்சி. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பகுதி பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்காக உலக அளவில் புகழ்பெற்றது.
குறிப்பாக ஜனவரி 17 அன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் இடையேயான உக்கிரமான சவால் போராக மாறும். காலை சூரியன் உதயமாகும் நேரத்தில், வாடிவாசல் என்று அழைக்கப்படும் சிறிய நுழைவாயிலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. முதலில் முனியாண்டி சாமி கோயில் காளை படி அவிழ்க்கப்பட்டு, பாரம்பரிய மரியாதையுடன் யாரும் பிடிக்காமல் விடுவிக்கப்படும்.

அதன் பிறகு தொடங்கும் உண்மையான வெறி. புலிகுலம், காங்கேயம் போன்ற உள்ளூர் இனக் காளைகள், தங்கள் கொம்புகளில் அலங்காரங்கள் அணிந்து, திமிலில் வலிமை ததும்ப, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றன. அவை மண்ணை கிளறி, தூசியை எழுப்பி, கண்ணில் தீயுடன் பாய்ந்து வரும் காட்சி மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும்.அந்த சீறிப்பாய்ச்சலின் வேகமும் வீரியமும் அபாரமானது. காளை வாடிவாசலில் இருந்து வெளியேறியவுடன், தரையை உதைத்து, தலை நிமிர்ந்து, கொம்புகளை முன்னோக்கி நீட்டி, முழு வேகத்தில் மைதானத்தை நோக்கி பாயும். அந்த வேகத்தில் தூசி பறக்க, காற்று சீற, பார்வையாளர்களின் உரத்த ஆரவாரங்கள் எழும்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.! களைகட்டிய நிகழ்ச்சி..! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!
இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன. காளையர்கள் காளைகளை அடக்க ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் ஜல்லிக்கட்டில் காளை வீரர்களை ஆட்டம் காண வைத்தது. வாடிவாசல் வழியாக வெளியே வந்த காளை வீரர்களை அலறவிட்டது. துரத்தி துரத்தி வீரர்களை ஒரு வழியாக்கியது. அப்போது காளையிடம் இருந்து தப்பிப்பதற்காக தரையிலேயே படுத்துவிட்டார். காளை அவர் அருகில் இருந்து சென்ற பிறகு அங்கிருந்து எழுந்து தப்பித்து உள்ளார்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... நான் வரேன்..! உற்சாகத்தை வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்..!