மதுரையில் இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: தூங்கா நகரில் அமித்ஷா.. பிரம்மாண்ட மேடைகள்.. தடபுடல் ஏற்பாடுகள்!

இதனையடுத்து தனியார் விடுதியில் அமித்ஷா தங்கியிருந்தார். இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். கட்சிக்கால பூஜையில் கலந்து கொண்ட அமித்ஷாவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அமித்ஷாவின் வருகையை ஒட்டி கோவிலில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!