மதுரையில் இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் மாநில அளவிலான பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. அமித்ஷா வருகையை ஒட்டி மதுரை மாவட்டம் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே உள்ள 12 ஏக்கரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள் ஒருபக்கம் இருந்தாலும், கட்சி பணிகளை முடுக்கிவிடவே அமித்ஷா முக்கிய நோக்கமாக கொண்டு மதுரை வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்