ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சமர்லகோட்டா மண்டலத்தின் வெட்லபாலெமில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் வெடிவிபத்தில் உடல்கள் சிதறி இறந்தனர். விபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த விபத்தில் சிலரது உடல்கள் 100 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் மொத்தம் 30 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டவுடன் தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் அடர்ந்த புகையால் சூழ்ந்து கொண்டது.
தகவல் கிடைத்தவுடன், தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுப்படுத்தி அணைத்தனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் கூறப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிப்பு சத்தம் கேட்டு, உள்ளூர்வாசிகள் பெருமளவில் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இருப்பினும் வெடி விபத்து என்பதால் மீட்க சென்றவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!