ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா சென்று கொண்டுருந்த தனியார் டிராவலஸ் பஸ் மின்கசீவு காரணமாக தீ பிடித்ததால் பரபரப்பு. டிரைவர் எச்சரிக்கையால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் லிங்கம்பள்ளியிலிருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரெயின்போ தனியார் டிராவல்ஸ் பஸ் அதிகாலை 3 மணிக்கு நல்கொண்டா மாவட்டம் பெத்தகாபர்த்தி அருகே வந்தபோது பஸ்சின் இன்ஜின் பகுதியில் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைக் கவனித்த டிரைவர் உடனடியாகப் பஸ்சை சாலையோரம் நிறுத்திப் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் பயணிகளை எச்சரித்தார்.
உடனடியாக அவசர கதவுகள் திறக்கப்பட்டு பஸ்சில் இருந்த சுமார் 36 பயணிகளும் தங்களது உடமைகளுடன் கீழே இறங்கினர். இருப்பினும், சில பயணிகளின் உடமைகள் பஸ்சிலேயே சிக்கி கொண்ட நிலையில் தீ பஸ் முழுவதும் பரவியது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!
தீயணைப்புப் படையினர் தாமதமாக வந்தபோதிலும் பயணிகள் கீழே இறங்கியதால் பெரும் விபத்து தடுக்க முடிந்தது. இந்தச் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பஸ் டிரைவர் நாகராஜு தெரிவித்தார். டிரைவரின் முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாகத் தப்பித்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இதையும் படிங்க: தென்காசி, நெல்லை அரிவாள் வெட்டு சம்பவத்தில் அடுத்த அதிரடி... இரவோடு, இரவாக போலீஸ் செய்த தரமான சம்பவம்...!