சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகவும் அவரை விடுவிக்க கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே, ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவர் வழக்கு பதிவு செய்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரன்.. விடுவிக்க கோரி மனுதாக்கல்..!

இந்த நிலையில் தமிழக டிஜிபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது என தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக டிஜிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காவல்துறை விசாரணையில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஞானசேகரன் மீது வேறு என்னென்ன வழக்குகள்..? விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு..!