பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் டபுள் எஞ்சின்.. டப்பா எஞ்சின் என்று விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளாசியுள்ளார்.
மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசு என்று சாடினார். மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான் என கூறினார்.

ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: FCRA கொண்டு வந்ததே காங்கிரஸ்தான்..! முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்..!! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!
திமுக ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டு இருப்பதாகவும் மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!