மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மலை திருட்டு விசாரணை அளித்துச் செல்லப்பட்டு காவலர்களால் அடித்து கொல்லப்பட்டார். தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு ஐந்து காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அஜித் குமாரின் மரணம் காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நவீன் பொல்லினேனி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தார். நவீன் மீது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து 44.5 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக நிறுவன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். நவீன் மரணம் தொடர்பாக தேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நவீன் மீது புகாரளித்து சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்து வந்தது ஏன் என்றும் துணை ஆணையர் பாண்டியராஜன் தற்போது விடுமுறையில் சென்றிருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக கூறியுள்ளார்.

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் வடு மறையும் முன்பே, மீண்டும் காவல்துறை சட்டத்தை மீறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றால், உண்மையில் காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே உண்மை என தெரிவித்தார். தமிழக அரசின் உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைக்க இயலாமல் முதலமைச்சர் செயலிழந்து விட்டாரா என கேள்வி எழுப்பி உள்ள அண்ணாமலை, முதல்வரின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் இன்னும் எத்தனை சட்ட மீறல்களைப் பொதுமக்கள் சகித்துக்கொள்ள வேண்டும் எனவும் உங்கள் நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
எனவே, நவீன் மரணம் குறித்த நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், இரண்டு வாரங்களாக வழக்குப் பதிவு செய்யாமல், நவீன் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கிய கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கியதில் கடும் உடல் நல பாதிப்பு...அஜித் குமார் தம்பி நவீன் அவசர பிரிவில் அனுமதி!
இதையும் படிங்க: இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு காசு இல்ல.. மக்களோட பணம்.. சீறிய விஜய்..!