திரௌபதி 2 திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு வரலாற்று அடிப்படையிலான ஆக்ஷன்-டிராமா படைப்பாகும். இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரது 2020ஆம் ஆண்டு வெளியான 'திரௌபதி' படத்தின் தொடர்ச்சியாகவும், அதே நேரத்தில் புதிய கதைக்களத்துடனும் வெளிவருகிறது.
திரௌபதி 2 திரைப்படம் நாளை வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். புண்ணிய பூமியாம் நம் திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு, 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மாமன்னன் வீர வல்லாளர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள திரௌபதி 2 திரைப்படம், மறைக்கப்பட்ட வீரத் தமிழ் மன்னர்கள் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டியது, முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்பும் ஒரு சமூகத்தின் கடமை என்றும் அந்த வகையில், இயக்குநர் மோகனின் திரைப்படங்கள், சமூக அக்கறையுடன் குறைகளைச் சுட்டிக்காட்டி, சுயநலத்துடன் செயல்படுபவர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றன என்று கூறினார்.
இதையும் படிங்க: அண்ணன்..! மீண்டும் NDA கூட்டணியில் சேர்ந்த டிடிவி தினகரனை வரவேற்ற அண்ணாமலை..!
அந்த வகையில், திரௌபதி 2 திரைப்படமும், அறமும், வீரமும் சேர்ந்த தமிழ் மண்ணின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதாகவும், பெருமை மிகுந்த தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் அழித்து, தமிழக மக்களிடையே பிரிவினையைத் தூண்டுபவர்களை அடையாளம் காட்டுவதாகவும் அமையவும், திரௌபதி 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடையவும், மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவின் மூன்றாவது மெகா ஊழல்!! EDயிடம் சிக்கிய குடுமி! ரூ.367 கோடி அபேஸ்!! அலசிய அண்ணாமலை!!