வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
அரசியல்

கூண்டோடு காலியாகும் பாஜக… அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகள் எடுத்த அதிரடி முடிவு…!

தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர்களுடன்  உரையாடினார். 

பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகும் அண்ணாமலையின் முடிவை தேசிய தலைமை ஏற்றது.  அண்மையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வழங்கினார் அண்ணாமலை.  பாஜகவில் இருந்து விலகியுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்று நண்பகல் 12மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி, தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சமூக வலைதளங்கள் வாயிலாக இளைஞர்களுடன்  உரையாடினார். 

அப்போது பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிதாக கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அப்துல்கலாம் பெயரில் கோவையில் அரசியல் மரபு நிறுவனம் உருவாக்க உள்ளதாக அறிவித்த அவர், www.wetheleader.org அமைப்பில் தன்னார்வலர்களாக இணையலாம் என்றும், ஆளும் கட்சி, எதிர்கட்சி இருந்தாலும் நாம் யாருக்கும் போட்டியில்லை என்றும் அறிவித்தார். 

நம் கட்சியில் நிரந்தர தலைவர், நிரந்தர எம்பி, எம்எல்ஏ இல்லை எனக்கூறிய அண்ணாமலை, ஒரே நபர் மீண்டும் மீண்டும் பதவிக்கு வரக்கூடாது. எம்எல்ஏ, எம்பி பதவி ஒருவருக்கு எத்தனை முறை என தீர்மானிக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.என்னோடு வருபவர்கள் பொறுமை, நிதானத்தோடு வர வேண்டும் என அறிவித்தார். 

இதையும் படிங்க: அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

அண்ணாமலையின் இந்த அறிவிப்பை அடுத்து இணையதள பக்கத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சில மணி நேரங்களிலேயே இணைய ஆரம்பித்துள்ளனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த அடுத்து தமிழ்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

இதனிடையே, நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் மொத்தமாக பாஜகவில் இருந்து விலகுவதாக மாநில தலைவர் வேல் கண்ணன் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் அறிவிப்பை வரவேற்று, நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகள் அதன் தலைமை அலுவலகத்தில் வைத்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் நாளைய முதலமைச்சர் அண்ணாமலை என கோஷம் எழுப்பினர்.

அவர் எடுக்க முடிவுகள் அனைத்திற்கும் நாங்கள் துணை நிற்போம். பாஜகவில் இருந்து அவர் வழங்கியதால் நாங்களும் எங்கள் நிர்வாகிகள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகுவதாக அண்ணாமலை நற்பணி மன்ற மாநில தலைவர் வேல் கண்ணன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: “WE THE LEADER”…! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी