அன்வர் ராஜா, தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற அன்வர் ராஜா, இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததிலிருந்து அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் எதிர்காலம் குறித்து தனது கருத்தை பகிரங்கமாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. அதிமுகவே தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும், அதற்கு எடப்பாடி பழனிசாமியே தலைவராக இருப்பார், என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து சந்திக்க உள்ள சூழலில் இவரது பேச்சு பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் திமுகவின் இணைய உள்ளதாக வெளியான தகவலை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி அன்வர் ராஜாவை கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து, அவர் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுடன் நெகட்டிவ் சக்தி, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். தனது கொள்கையிலிருந்து தடம் புரண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்... ஆரோக்கியமாக விவாதிக்க எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை என்றும் மூன்று முறை கூட்டணி குறித்து பேட்டி அளித்த அமித் ஷா, இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பாஜகவின் வேலை என்றும் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இபிஎஸ்- ஆல் கூற முடியவில்லை என்றும் அன்வர் ராஜா தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிச்சயம் ஆட்சி மாறும்.. காட்சிகளும் மாறும்.. நயினார் நாகேந்திரன் உறுதி..!