சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே உள்ள ஒலிம்பியாட் சிக்னலில், பிரபல ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர். அமீன் பயணித்த சொகுசுக் கார் விபத்துக்குள்ளான சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர். அமீன், தனது நண்பரான பார்கவ் என்பவருடன் கோயம்பேட்டில் இருந்து கிண்டி நோக்கி சொகுசுப் 'போர்ஷ்' (Porsche) காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது நந்தம்பாக்கத்தில் இருந்து கிண்டி நோக்கி வந்த கால் டாக்ஸி காரும், அமீனின் போர்ஷ் காரும் எதிர்பாராதவிதமாகக் கத்திப்பாரா ஒலிம்பியாட் சிக்னல் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

காரை ஓட்டி வந்த அமீனின் நண்பர் பார்கவ், ஏ.ஆர். அமீன் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர் ஆகிய மூவரும் சிறிய காயங்களுடன் நல்வாய்ப்பாகப் பேராயுதம் இன்றி உயிர் தப்பினர்.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!
மோதிய வேகத்தில் சொகுசுக் காரின் பாதுகாப்பு அமைப்புகள் இயங்கியதால், காரின் கதவுகள் அனைத்தும் தானாகவே லாக் ஆகிவிட்டன. இதனால் காருக்குள் இருந்தவர்கள் உடனடியாக வெளியே வர முடியாமல் சிறிது நேரம் தவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுப் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் லாக் ஆன போர்ஷ் காரைக் கிரேன் எந்திரம் மூலம் மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து எப்படி நடந்தது என்பது குறித்தும், அதிவேகமாகக் கார் இயக்கப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முறையாக திட்டமிடாததால் ரூ.31 கோடி வீணடிப்பு?! கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத்தில் குழப்பம்!