ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதாகவும், இதனால் ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: குலை நடுங்க வைக்கும் இரட்டைக் கொலை… விரைவில் கைது… மாவட்ட எஸ்.பி. உறுதி…!
ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதித்துள்ளது. அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்திய நிலையில், 2 ஆண்டுகள் தண்டனை என்பதால் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறி, நீதிமன்ற பிணைக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 2026 சட்டசபை தேர்தல்!! விஜய் டார்கெட் இந்த 3 தொகுதி தான்! வெளியானது டாப் சீக்ரெட்!