தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் குறித்து அவதூறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகக் கூறி நெல்லை மாவட்டம் முன்னீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் பின்னணியில் முதலமைச்சர் விஜய்யை இணைத்து பொய்யான, அவதூறான பதிவுகளை வெளியிட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நெல்லை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்டவர் ஜோசப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் விஜய் தொடர்பான அவதூறான கருத்துகளுடன் மதம், மொழி, இனம் சார்ந்த தவறான தகவல்களையும் இவர் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் பொய்யான தகவலை பரப்புதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஆஹா... என்ன ஒரு மாற்றம்..! ரத்தக்காடாக மாறுது தமிழ்நாடு..! கொந்தளித்த EPS..!
இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது ஒரு எச்சரிக்கை செய்தியாக இருப்பதாகவும், அரசியல் ரீதியாக செயல்படும் இளைஞர்கள் சமூக ஊடகங்களில் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “பெண்கள் பாதுகாப்பில் விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்"..! குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை..! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு..!