தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சமீப காலமாக மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள், கொலை வழக்குகள் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் புதிய முதலமைச்சர் விஜய் இன்று உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி இருந்த நிலையில் பல்வேறு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!
கடும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவருக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலியல் குற்றவாளிக்களை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். துரிதமாக வழக்கு பதிவு செய்து விரைவாக விசாரித்து கடும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார். குற்றச் செயல்களை ஈடுபடத் திட்டமிடுவோரை தடுக்கும் விதமாக நடவடிக்கை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிரடியாக வருகிறது "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை"..!! வரும் 27ம் தேதி தொடக்கம்..!!