இந்தியாவின் நிதி முறையில், குறிப்பாக மாநில அளவிலான பட்ஜெட் செயல்முறைகளில், "கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை" என்பது அரசின் செலவு திட்டங்களை நிதியளிக்கும் ஒரு முக்கியமான கருவியாக விளங்குகிறது. இது அரசின் சாதாரண பட்ஜெட்டிற்கு அப்பாற்பட்ட, எதிர்பாராத அல்லது தேவையான கூடுதல் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களில் இது சட்டமன்ற விவாதங்களின் மையமாக இருக்கும் அதேவேளை, இது அரசின் நிதி ஒழுங்கை பராமரிக்கும் ஒரு அவசியக் கருவியாகவும் செயல்படுகிறது.

இதில், வேளாண் துறை, நீர்வளத் துறை போன்றவற்றுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் விவாதிக்கப் படுகின்றன. இது போன்ற கூடுதல் கோரிக்கைகள், அரசின் திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்த உதவுகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் கூடுதல் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்ய அல்லது திடீர் சாலை அமைப்பு திட்டங்களுக்கு இது பயன்படுகிறது.
இதையும் படிங்க: அமித்ஷா பின்னணியில் விஜய்...கட்சி ஆரம்பிக்க சொன்னதே BJP தான்... அப்பாவு பரபரப்பு பேட்டி...!
சென்னை தலைமைச் செயலக பேரவைத் தலைவர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட உள்ளதாக அறிவித்தார்.
அன்றைய தினம் சபை கூடியதும் முன்பு பேரவை ஒத்திவைக்கப்பட்டதில் இருந்து இதுவரை மறைவுற்ற வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி உட்பட எம்எல்ஏக்கள் 8 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். தொடர்ந்து, 2005-26 கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை பேரவையில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் கூறிய அப்பாவு, அக்டோபர் 14 ஆம் தேதி முன்பு ஒருநாள் அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி யாரும் பிச்சை எடுக்கக்கூடாது.. மிசோரம் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்..!!