தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் 3 ஆம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. இந்த அமர்வு புதிய அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பிரதிபலித்தது. முதல் நாள் ஆளுநர் உரையிடம் தொடங்கிய அமர்வு இரண்டாம் நாளில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இடம் பெற்றன. மறைந்த முன்னோடிகளுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் திங்கட்கிழமையான இன்று மூன்றாம் நாள் அமர்வு தொடங்கியது. பேரவை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, திருவள்ளூர் அம்மோனிய வாயுகசிந்து சம்பவம் எதிர்பாராத விபத்து என்றும் ஐந்து பேர் பலியாகி இருப்பதாகவும் 70 பெண்கள் நான்கு ஆண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் பர்வேஸ் விளக்கம் கொடுத்திருந்தார்.

110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் அறிக்கையை வாசித்தார். அப்போது எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். சபை விதிகளுக்கு உட்பட்டே நடப்பதாக சபாநாயகர் பிரபாகர் அப்போது விளக்கம் கொடுத்த போதிலும் தொடர்ந்து எதிர்க் கட்சியினர் கத்தி கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தனர். அமைச்சர் விளக்கத்திற்கு முன்பே தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர் கட்சியினர் சப்தமிட்டனர்.
இதையும் படிங்க: CM விஜயை விமர்சித்த திமுக எம்எல்ஏ... கொளத்தூரை இழுத்து விட்ட சம்பவம்..! ஆஸ்டின் கேள்வி.. ஆதவ் பதிலடி..!
உரிய நேரத்தில் பேச அனுமதிக்கப்படும் என்று சபாநாயகர் கூறியும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்தனர். 110 விதியின் கீழ் அமைச்சர் அறிக்கை வாசித்த பிறகுதான் பேச அனுமதிக்க முடியும் என்றும் சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். திருவள்ளூர் அம்மோனியா வாயுகசிவு உயிரிழப்பு தொடர்பாகவும் முதலமைச்சர் விஜய் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் பர்வேஸ் விளக்கம் கொடுத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் அப்போது தெரிவித்தார். சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் நிலையில் இந்த அறிவுரையை கொடுத்தார்.
இதையும் படிங்க: தவெக அரசின் வெள்ளை அறிக்கை... மரபு தெரியுமா..? சட்டபேரவையில் காரசார வாதம்..!