2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கியது. இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்திருந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த கூட்டத்தொடரில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் முன்னிலையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 வது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடந்த நிலையில், கேள்வி நேரம் நடந்தது. விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கொடுக்கவில்லை எனக்கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது சட்டமன்ற அமர்வுகளின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று. இது பொதுவாக ஒவ்வொரு அமர்வின் தொடக்கத்தில், முதல் மணி நேரத்தில் நடைபெறும் ஒரு நடைமுறை. இந்த நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசின் நிர்வாகம், கொள்கைகள், திட்டங்கள், பொது மக்களின் பிரச்சனைகள் போன்றவை குறித்து அமைச்சர்களிடம் கேள்விகள் எழுப்புகின்றனர். அமைச்சர்கள் இந்தக் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது.
இதையும் படிங்க: அதிருப்தி... அவ்ளோ சொல்லியும் கேட்கல..! திமுகவில் இணைந்த மாணிக்கராஜா பரபரப்பு பேட்டி..!
சட்டப்பேரவையில் இன்றைய நான்காம் நாள் அமர்வில், வண்டல் மண் எடுக்கக் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டப்பேரவையில் பதிலளித்தார். மண்பாண்ட தொழிலாளர்கள் வசிப்பிடத்திற்கு அருகே வண்டல் மண் எடுக்க மனுதந்தால் பரிசீலித்து அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். வண்டல் மண் எடுக்க அனுமதிப்பது தொடர்பாக காமராஜர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் இவ்வாறு பதிலளித்தார்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்த அமமுக முக்கிய நிர்வாகி..! அதிரடி நீக்கத்தால் அரசியலில் தலைகீழ் திருப்பம்..!