அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒரு பயங்கரவாதி இன்று ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் பயங்கரவாத தடுப்புப்படையினரும், ஃபரிதாபாத் சிறப்புப் பணி படையினரும், மத்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 2024-ல் திறக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வந்த ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை அதிகாரிகள் இந்த கைது மூலம் தகர்த்து எறிந்துள்ளனர்.

19 வயதான அப்துல் ரஹ்மான் என ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபரை, அவரது இருப்பிடத் தகவல்களை வைத்து உளவுத்துறையினர் துல்லியமாகக் கண்டறிந்தனர். பாலி கிராமத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த இரண்டு நேரடி கையெறி வெடி குண்டுகள், தீவிரவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதனை வைத்து அந்த பயங்கரவாதியின் தாக்குதல் நோக்கங்களையும், எச்சரிக்கைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை.. வீடுபுகுந்து சிறுமிகளை சிதைத்த கொடூரம்.. ஓசூரில் 5 சிறுவர்கள் போக்சோவில் கைது..

கோடிக்கணக்கானவர்களால் பக்திப் பரவசத்துடன் மதிக்கப்படும் ராமர் கோயிலை, ரஹ்மான் உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் நேரடி தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதனை மேலும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த அவரிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கும் ஆன்மீக கலாச்சார முக்கியத்துவத்தின் அடையாளமான ராமர் கோயிலைச் சுற்றி பாதுகாப்புகள் அதிகரிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
பயங்கரவாதி ரஹ்மான், ஃபரிதாபாத்தில் ரகசியமாக வசித்து வந்ததாகவும், தன்னை சந்தேகப்படாதபடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் நல்லவனாகவும் காட்டிக் கொண்டு வந்துள்ளான். ரஹ்மான் கைது செய்யப்பட்ட பின் அவன் பயங்கரவாதி எனத் தெரிந்த பிறகு அக்கம்பக்கத்தில் வசிக்கும் அண்டை வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர்.

குஜராத் பயங்கரவாத தடுப்புப்படையினரும், ஃபரிதாபாத் சிறப்புப் பணி படையினரும் இந்த அச்சுறுத்தலைத் தடுக்க விரைவாக செயல்பட்டனர். அவரை கைது செய்யாமல் விட்டிருந்தால் தாக்குதல் விரைவில் நடத்தப்பட்டிருக்கும் என ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் முந்தைய பாதுகாப்பு மீறல்களைத் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக ஜனவரி 2025-ல் கோயில் வளாகத்திற்குள் கேமரா பொருத்தப்பட்ட கூலிங் கிளாஸை பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வரும் பாதுகாப்பு அதிகாரிகள் ரஹ்மானின் தொடர்புகள் மற்றும் நோக்கங்களை ஆராய்ந்து வருகின்றனர். முதற்கட்டமாக அவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற தீவிரவாதக்குழுவுடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த கைது, குறிப்பாக ராமர் மந்திரின் முதலாம் ஆண்டு விழா போன்ற நிகழ்வுகளுக்கு முன்னதாக, ஆன்மிக தலங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: கனல் கண்ணனை துன்புறுத்தக் கூடாது.. முன்ஜாமின் வழக்கில் உயர்நீமன்ற மதுரைக் கிளை உத்தரவு..