அயோத்தியில் 2024 ஜனவரியில் திறக்கப்பட்ட பிரமாண்ட ராமர் கோயில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பால ராமரை தரிசிக்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் அயோத்திக்கு வருகை தருகின்றனர்.
கோயில் திறப்புக்கு பிறகு அயோத்தி நகரின் பொருளாதாரம் பெரும் உயர்வை கண்டுள்ளது என்று ஐஐடி லக்னோ பேராசிரியர் வெங்கடரமணய்யா தலைமையிலான ஆய்வுக் குழு தயாரித்த அறிக்கை தெரிவிக்கிறது.
கோயில் திறப்புக்கு முன் ஆண்டுக்கு சராசரியாக 1.7 லட்சம் பேர் மட்டுமே அயோத்திக்கு வந்தனர். ஆனால் 2024-இன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 11 கோடி பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகளின் தினசரி வருமானம் 400-500 ரூபாயில் இருந்து 2,500-3,000 ரூபாயாக 5 மடங்கு உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ராகுல்காந்தி தலையில் பேரிடி! ஓங்கி ஒலிக்கும் ஸ்டாலின் பெயர்! காங்கிரசுக்கு எதிராக திரளும் எதிர் கட்சிகள்!!
கோயில் அருகே உள்ள நிலங்களின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் நில விலை 40-50 சதவீதம் அதிகரித்துள்ளது. கோயில் திறப்புக்கு பிறகு 150-க்கும் மேற்பட்ட புதிய ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவு 400 மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலா துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் போக்குவரத்து, சுற்றுலா, வணிகம் உள்ளிட்ட துறைகளில் 1.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் அரசுக்கு 20,000 முதல் 24,000 கோடி ரூபாய் வரை வரி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி மக்கள், சிறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் துறையினர் ஆகியோரிடம் நேரடியாக கலந்துரையாடி சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்பு அயோத்தியை மட்டுமல்ல, முழு பகுதியின் பொருளாதாரத்தையும் உயர்த்தியுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் அயோத்தி இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாக மாறும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அயோத்தி நகரின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், ஆன்மீகத்திற்கும் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது!
இதையும் படிங்க: இரைச்சலானது இசை!! முகம் சுழிக்கும் மும்பை வாசிகள்!! நாட்டின் முதல் 'ஜெய் ஹோ' இசைச் சாலையால் மக்கள் அவதி!!