காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை இந்தியாவின் மிக நீண்டகால இடைமாநில நீர் சர்ச்சைகளில் ஒன்று. இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து வரும் மோதலுக்கு மத்தியில், மேகதாது அணை திட்டம் மீண்டும் முக்கியப் பேசுபொருளாகியுள்ளது. 2025 நவம்பர் 13 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது கர்நாடகாவின் பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் மீது கர்நாடக-தமிழ்நாடு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இடம். கர்நாடக அரசு இங்கு சமநிலை நீர் தேக்க அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 67.16 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாகவும், 400 மெகாவாட் மின்சக்தி உற்பத்தியுடன் கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அணை பெங்களூரு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளின் குடிநீர் தேவையை நிறைவேற்றவும், நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் உதவும் என்று கர்நாடகா கூறுகிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் இந்தத் திட்டத்தை காவிரி நீர் பங்கீட்டு உத்தரவுகளுக்கு எதிரானது என்று கருதுகின்றனர். மேகதாது விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி எப்படி ஜெய்ச்சாரு..! நாங்களா குதிரை பேரம் செஞ்சோம்..? ஆதவ் சரமாரி கேள்வி..!!

கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எள் முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழ் நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாகத் தொடர்ந்து எடுக்க வேண்டும் என்றார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தாமலும் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமலும், ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமலும், மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீரை கர்நாடக காங்கிரஸ் அரசிடமிருந்து கேட்டுப் பெறாமலும், முதல் கோணல், முற்றும் கோணல் என்பதுபோல் ஆட்சியின் துவக்கத்திலேயே டெல்டா மாவட்ட விவசாயிகளை ஏமாற்றத்திற்கும், துன்பத்திற்கும் த.வெ.க. அரசு உள்ளாக்கியுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களை தமிழக அமைச்சரவையில் சேர்த்து, அவர்களுக்கொரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த த.வெ.க. தலைவர், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மேகதாதுவில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்தவும், தமிழகத்திற்கு உரிய பங்கு நீரை பெறவும் முயற்சிக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!