இந்தியாவின் மிகவும் மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான பீகாரின் 243 தொகுதிகளுக்கான இந்தத் தேர்தல், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் (அக்டோபர் 6 முதல் 11 வரை) வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பீகாரின் அரசியல் களத்தை மேலும் சூடாக்கி, தேசிய அளவிலான கூட்டணிகளின் வலிமையை சோதிக்கும் ஒரு முக்கிய சந்தர்ப்பமாக அமையும்.
தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிர பணிகளில் ஈடுபட்டு உள்ளது. ஜூன் 24, 2025 அன்று, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்தது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் இதை வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் சதி என்று குற்றம் சாட்டின.

அதேசமயம் தேர்தல் ஆணையம் (ECI) இதை "பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்யும் அவசியமான நடவடிக்கை" என்று விவரித்தது. இந்தச் சர்ச்சை சுப்ரீம் கோர்ட்டின் தலையீட்டுடன் மேலும் சூடு பிடித்தது, அது வெளிப்படையான தகவல் வெளியீட்டை உத்தரவிட்டது. இவை ஒருபக்கம் இருக்க, வாக்குத்திருட்டு பிரச்சனையை மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கையில் எடுத்துள்ளார். இவை பீகார் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் பெரியார் உருவப்படம்! MP என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் அறிவிப்பு..!
இந்த நிலையில், பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதானை ஜெ.பி.நட்டா நியமனம் செய்தார். மேலும், துணை பொறுப்பாளர்களாக சி.ஆர்.பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இனிமே தப்பு நடக்காது! ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை.. தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்பு..!