• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நாட்டையே உலுக்கிய சோகம்...!! - கங்கையில் கவிழ்ந்த படகு... சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி... !

    ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Amaravathi Wed, 14 Oct 2026 08:33:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bihar ganga river boat accident

    பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றில் நிகழ்ந்த படகு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில், குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் தியாரா பகுதியில் கங்கை ஆறு பாய்கிறது. ஆற்றின் மறுகரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, 20-க்கும் மேற்பட்டோர் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் படகு ஆற்றில் கவிழ்ந்ததால், அதில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உள்ளூர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் களமிறங்கி ஆற்றில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் உதவி வருகின்றனர்.

    இதையும் படிங்க: நடுக்கடலில் மூழ்கிய அகதிகள் படகு: 15 குழந்தைகள் உட்பட 109 பேர் பலி.. 116 பேரின் நிலை மர்மம்!

    இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படகில் பயணம் செய்தவர்களில் யாரேனும் காணாமல் போயுள்ளார்களா என்பதைக் கண்டறியத் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    நிவாரணம் அறிவிப்பு:

    இந்தத் துயரச் சம்பவம் குறித்து பீகார் முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “வைஷாலி மாவட்டத்தின் ரகோபூர் பகுதியில் நிகழ்ந்த படகு விபத்தில் அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த இழப்பிலிருந்து மீண்டு வரத் தேவையான மனவலிமையைப் பெற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

    மீட்பு பணியின் நிலவரம் என்ன? 

    படகு விபத்து தொடர்பாக பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் இரங்கல் தெரிவித்துள்ளார். ரகோபூர் தியாரா பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாகத் துயரமான தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஆற்றில் மூழ்கியவர்களில் பலர் குழந்தைகள் என்பது வேதனையை அதிகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    மேலும், உள்ளூர் மக்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மீட்பு, நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவிப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    குடியரசு துணைத் தலைவர் இரங்கல்:

    கங்கை ஆற்றில் நிகழ்ந்த இந்த விபத்துக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையும் தைரியமும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

    கங்கை ஆற்றில் ஏற்பட்ட இந்தப் படகு விபத்து பீகார் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்தில் சிக்கிய அனைவரின் நிலை குறித்தும் அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது.

    இதையும் படிங்க: ரூ.3,108 கோடி பிரம்மாண்ட குடிநீர் திட்டம்... இன்று அடிக்கல் நாட்டும் சி.எம்.விஜய்... ‘ரிங் மெயின் சிஸ்டம்’ பற்றிய முழு விவரம் இதோ...!

    மேலும் படிங்க
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    இந்தியா
    தமிழகத்தில் வறட்சியா.? எல் நினோ பாதிப்பை எதிர்கொள்ள CM விஜய் அதிரடி நடவடிக்கை! நிபுணர் குழு அமைப்பு!

    தமிழகத்தில் வறட்சியா.? எல் நினோ பாதிப்பை எதிர்கொள்ள CM விஜய் அதிரடி நடவடிக்கை! நிபுணர் குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    காஷ்மீர் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! PoK-வில் குளிர்காலத்துக்கு முன் ஊடுருவல் முயற்சி? பாதுகாப்பு தீவிரம்!

    காஷ்மீர் எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்! PoK-வில் குளிர்காலத்துக்கு முன் ஊடுருவல் முயற்சி? பாதுகாப்பு தீவிரம்!

    இந்தியா
    கோவை பயணம் முடிந்ததும் திருச்சூர் பறக்கும் முதல்வர் விஜய்! ஒரே நாளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள்! முழு விவரம்!

    கோவை பயணம் முடிந்ததும் திருச்சூர் பறக்கும் முதல்வர் விஜய்! ஒரே நாளில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள்! முழு விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share