• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பினராயி மருமகன் ஸ்பான்சரா? கேரளாவில் வெடிக்கும் பூகம்பம்..!

    பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள யுடியூபர் ஜோதி மல்ஹோத்ராவின் கேரள பயணத்திற்கு முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் ஸ்பான்சர் செய்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
    Author By Pandian Sun, 01 Jun 2025 16:02:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-alleges-that-chief-ministers-son-in-law-sponsored-s

    ஹரியானாவைச் சேர்ந்த யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான் உர் ரஹீம் என்ற டேனிஸ் என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

    இந்தியா

    இதைத்தொடர்ந்து அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. டேனிஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு சென்ற அவர் அங்கு ஐ.எஸ்.ஐ.யுடன் நேரடி தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

    இதையும் படிங்க: உளவாளி ஜோதி மல்ஹோத்ராவுக்கு பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. ஸ்காட்லாந்து யூடியூபர் அதிர்ச்சி தகவல்..

    அவரது செல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட 5 நாள் போலீஸ் காவலில் பல தகவல்கள் வெளிவந்தன. அவருடைய லேப்-டாப்பை ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் உளவுத்  துறையுடன் ஜோதி மேற்கொண்ட உரையாடல்கள், அவர்கள் உடனான அழைப்புகள், பண பரிவர்த்தனைகள் போன்ற தகவல்களும் இருந்தன.

    இந்தியா

    4 பாகிஸ்தானியர்களுடன் ஜோதி மல்ஹோத்ரா நேரடி தொடர்பில் இருந்து தகவல்களை பரிமாறியது,  பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து சிறப்பு பாதுகாப்பு அனுமதி மற்றும் சலுகைகள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    வி.ஐ.பி. சலுகையை பயன்படுத்திய ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றிய காட்சிகளும் டிஜிட்டல் ஆவணங்களில் இருந்தன. இந்த வீடியோக்கள் ஜோதியின் பாகிஸ்தான் பயணங்களில் அவர் வி.ஐ.பி. வரவேற்பு பெற்றதை அம்பலப்படுத்தி உள்ளது.

    இந்தியா

    அவர் பாகிஸ்தான் சென்ற சமயத்தில் லாகூரில் அங்குள்ள அனார்கலி பஜாரை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஏ.கே. 47 துப்பாக்கிகள் ஏந்திய நபர்கள் பாதுகாப்பு அளித்துள்ளனர்.ஸ்காட்லாந்து நாட்டு யூ-டியூபர் கல்லம் மில் Kalum Mill என்பவர் அந்த பஜாரில் இருந்தபோது, ஜோதி மல்ஹோத்ராவை சந்தித்து பேசி வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.  

    வீடியோ காட்சிகளில்,  தனக்கு முன் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் ஏந்திய நான்கு நபர்கள் இருப்பதாக கல்லம் தெரிவிக்கிறார். ஜோதியுடன் கல்லம் மில் பேசி முடிக்கும் வரை, துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவருக்கு அருகிலேயே இருந்துள்ளது தெரிகிறது.  

    இந்தியா

    இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் நடந்த சுற்றுலாத்துறையின் நிகழ்ச்சியில், உளவாளி ஜோதி மல்ஹோத்ரா பங்கேற்றதாகவும், அதற்கு முழுக்க முழுக்க சுற்றுலா துறையே ஸ்பான்சர் செய்துள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கேரள பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் விடுத்த எக்ஸ் தளப்பதிவில், 'பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் கண்ணூர் பயணத்திற்கு கேரள சுற்றுலாத்துறை ஸ்பான்சர் செய்துள்ளது. அந்தத் துறையின் அமைச்சராக முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஷ் தான் இருக்கிறார்.

    இந்தியா

    ஜோதி மல்ஹோத்ரா யாரை சந்தித்தார்? எங்கு சென்றார்? அவரது வந்ததற்கான உண்மையான நோக்கம் என்ன? பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவாளிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?', என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஜோதி மல்ஹோத்ரா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், கேரள சுற்றுலாத்துறை நிகழ்ச்சியில் அரசின் ஸ்பான்சர் மூலம் அவர் கண்ணூர் வந்ததாக எழுந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பாக்.-ல் திருமணம்..! உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய திட்டம்.. டெலிட் செய்த மெசேஜை ரெக்கவர் செய்த அதிகாரிகள்..!

    மேலும் படிங்க
    மம்முட்டியான் பாடலை யாரை கேட்டு பயன்படுத்தினீங்க.. டூரிஸ்ட் ஃபேமிலியில் வந்த பாடலுக்கு தியாகராஜன் ரியாக்ஷன்..!

    மம்முட்டியான் பாடலை யாரை கேட்டு பயன்படுத்தினீங்க.. டூரிஸ்ட் ஃபேமிலியில் வந்த பாடலுக்கு தியாகராஜன் ரியாக்ஷன்..!

    சினிமா
    நாளை

    நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    தமிழ்நாடு
    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    ஒரே வருடத்தில் இத்தனை சோதனையா.. விபத்தில் தந்தையை பறிகொடுத்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!

    ஒரே வருடத்தில் இத்தனை சோதனையா.. விபத்தில் தந்தையை பறிகொடுத்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!

    சினிமா
    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    இந்தியா

    செய்திகள்

    நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

    நாளை 'பக்ரீத் பண்டிகை'.. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    #ராஜ்யசபா தேர்தல்: EPS முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

    தமிழ்நாடு
    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்...திமுக கூட்டணி வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத்தாக்கல்!

    தமிழ்நாடு
    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    ஹப்பாடா..! EMI குறைய போகுது!! வீடு, வாகன கடன் வாங்குனவங்களுக்கு பெரிய ரிலாக்‌ஸ்..!

    இந்தியா
    உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு..!

    உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்..! பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு..!

    இந்தியா
    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share