இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரும் சண்டை வெடித்து ஓய்ந்த நிலையில், நம் தேசத்துக்கு எதிராக உளவு பார்த்த சதிகாரர்கள் அடுத்தடுத்து சிக்கி வருவது நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது.பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானாவை சேர்ந்த 11 உளவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மிகவும் ஆபத்தானவர் ஹரியானாவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்கோத்ரா. ‛Travel with Jo’ என்பது இவரது யூடியூப் சேனல்.33 வயதான இந்த இளம் பெண்ணுக்கு யூடியூபில் கிட்டத்தட்ட 4 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ். இன்ஸ்டாவில் ஒன்றரை லட்சம் பாலோயர்ஸ்.

மல்கோத்ராவின் வசீகர தோற்றமும் கலகலப்பாக பேசும் ஆற்றலும் அவரை சோசியல் மீடியாவில் வேகமாக பிரபலம் அடைய செய்தது.மல்கோத்ராவுக்கு அது போதவில்லை. பாகிஸ்தான் போய் வீடியோ போட்டால், இன்னும் மின்னல் வேகத்தில் வளரலாம் என்று ஆசைப்பட்டார்.அந்த ஆசை தான் ‛பாகிஸ்தானுக்காக நாட்டை உளவு பார்த்த சதிகாரி’ என்று குற்றவாளி கூண்டில் ஏற்றி இருக்கிறது. டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்தார்.
இதையும் படிங்க: பர்சனல் டைரியில் பாக்., குறிப்புகள்.! உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய நெட்வொர்க்..!

அவர்கள் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் நெருங்கினார். டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவர் மூலம், பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஊடகங்களில் பிரசாரம் செய்வது; நமது ராணுவத்தின் தகவல்கள், முக்கிய இடங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அளிப்பது போன்ற உளவு வேலைகளை பார்த்துள்ளனர்.

ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் செல்வதற்கு டேனிஷ் உதவியுடன் கடந்த ஆண்டு விசா பெற்றார். அவரது உதவியால் ஜோதி, அங்கு விவிஐபி போல் நடத்தப்பட்டார். பாகிஸ்தானில் அவர் மேற்கொண்ட பயணம் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த அலி ஹசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்தியா திரும்பியதும், இருவரும் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.

ஜோதி மல்ஹோத்ராவிடம் மத்திய உளவுத்துறையினர், போலீசார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வரும்நிலையில், அதில் பல தகவல்கள் கிடைத்து வருகின்றன. அதில், வாட்ஸ்அப் மூலம் அலி ஹாசன் என்பவருடன் செய்த கலந்துரையாடல் குறித்த தகவல்கள் கசிய துவங்கி உள்ளன. அதில், பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள ஜோதி விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஜோதி அனுப்பிய செய்தியில், ' பாகிஸ்தானில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்,' எனக்கூறியுள்ளார். அதற்கு அலி ஹாசன் அளித்த பதிலில், ' ஜோதி, நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிக் கொள்கிறேன். எப்போதும் புன்னகையுடன் இருங்கள். வாழ்க்கையில் எப்போதும் ஏமாற்றம் வரக்கூடாது' என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மல்கோத்ரா வசம் இருந்த 3 போன்களில் ஒன்றை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு என்றே மல்கோத்ரா பயன்படுத்தி இருக்கிறார். பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்புகொள்ள பயன்படுத்த வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தளங்களை அந்த குறிப்பிட்ட நம்பரில் இருந்தே அவர் பயன்படுத்தி இருக்கிறார். அவரது வாட்ஸ்அப் சாட்டில் டெலிட் செய்த அம்சங்களை ரெக்கவர் செய்த போது கிடைத்த திடுக்கும் தகவல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?